கன்னியாகுமரி, அக்.6- சமத்துவம் சமூக நீதியை வலியுறுத்தி குமரி மாவட்ட திராவிடர் கழகம் கன்னியாகுமரி நகர கழகம் சார்பாக பெரியார் நடை நிகழ்ச்சி 4.10.2026 அன்று காலை 9 மணிக்கு கன்னியா குமரியில் அண்ணா சிலையிலிருந்து தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்ரமணியம் தலைமை தாங்கினார் மாவட்ட கழகச் செயலா ளர் கோ. வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார்
திமுக அகஸ்தீஸ்வரம் ஒன்றியச் செயலாளர் பா.பாபு பேரணியைத் தொடங்கி வைத்தார்.
திராவிட கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா. குண சேகரன் ஒருங்கிணைத்தார். மாவட்ட கழகக் காப் பாளர் ம.தயாளன், மாவட்டத் துணை தலைவர் ச.நல்லபெருமாள், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு, மாவட்ட மகளிர் பாசறை செய லாளர் மஞ்சு குமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் எஸ்.அலெக்சாண்டர் சி.அய்சக் நியூட்டன், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் மு.பெரியார்தாஸ், திரா விடர் கழக கோட்டாறு பகுதித் தலைவர் ச.ச. மணிமேகலை, ச.ச.சத்தியா ராணி தி.ஞானவேல், மு.இராஜன், மு.பால்மணி, மு.பெருமாள், திமுக நிர்வாகிகள் ஆட்லின், தேவகி சகாய ஆண்டனி காக்குமூர் ப. வி. அருண் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர் கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் பயணத்தை நிறைவு செய்து நிகழ்ச்சியில் நிறைவுறையாற்றினார் கன்னியாகுமரி அண்ணா சிலை முன்பு பேரணி தொடங்கி காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபம் வழியாக பேரணி சென்றடைந்தது.
நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும் பெரியாருடைய நூல்கள் வழங்கப்பட்டன. பங்கேற்ற வர்களுக்கு சான்றிதழ் பதக் கம் வழங்கப்பட்டது.
