பெரம்பலூர் மாவட்டத்தில் ‘விடுதலை’ சந்தா இலக்கை விரைந்து முடிக்க களப்பணி

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெரம்பலூர், மே 21- பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், விடுதலை நாளேட்டிற்கு 50 சந்தா சேர்க்க வேண்டும் என கடந்த 06.05.2024 அன்று மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையில் நிர்வாகிகளோடு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் தீரன் நகரை சேர்ந்த சின்னதுரை, தன்ராஜ், சாமிநாதன், ரெங்கராஜ், மேலும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துவேலு, பொன்னுசாமி ஆகியோரிடம் விடுதலை சந்தா பெறப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *