மதுரை, அக். 6- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்), தஞ்சாவூர், அய்சிடி அகாடமி, தமிழ் நாடு அரசு சார்பில் வழங் கப்பட்ட மூன்று சிறப்பு மிக்க விருதுகளைப் பெற்று உள்ளது.
மதுரையில் உள்ள Courtyard by Marriott-இல் 30.09.2026 அன்று நடைபெற்ற அய்சிடி அகாடமி BRIDGE 2026 நிகழ்வில் இவ்விருதுகள் வழங்கப்பட்டன.
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) தஞ்சாவூர் பெற்ற விருதுகள்:
மிகுந்த ஈடுபாட்டுடன் செயல் பட்ட உறுப்பினர் நிறுவன விருது – அய்சிடி அகாடெமி வழங்கும் சேவைகள் மற்றும் திட்டங்களை சிறப்பாகப் பயன்படுத்தி, சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய தற்காக பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (PMIST), தஞ்சாவூர் தேர்வு செய்யப்பட்டது.
சிறந்த ஒருங்கிணைப் பாளர் விருது –அய்சிடி அகாடெமி-யின் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, சிறந்த விளைவுகளை ஏற்படுத்திய தற்காக முனைவர் பா.இளங்கோவன், இணைப் பேராசிரியர், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை அவர்களுக்கு வழங்கப் பட்டது.
கல்விசார் தலைமைத் துவ விருது – கல்விசார் தலைமைத்துவம் மற்றும் அய்சிடி அகாடெமி திட்டங்களை நிறுவனத் தில் சிறப்பாக செயல் படுத்த வழங்கிய ஆதர விற்காக முனைவர் பி. கே.சிறீவித்யா, பதிவாளர், அவர்களுக்கு வழங்கப்பட்டது.
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் விருதாளர்களுடன், முனைவர் டி. மகேஷ் குமார், இயக்குநர், இயக்குநர் – நிறுவன வேலைவாய்ப்பு மய்யம்; முனைவர் ஏ. முத்தமிழ் செல்வன், தலைவர், தகவலியல் துறை; மற்றும் முனைவர் கி. மீனா, உதவிப் பேராசிரியர், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த மூன்று விருது களும் PMIST நிறுவனம் தொழில்–கல்வி நிறுவன ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, தொழில்நுட்ப அடிப்படையிலான கற்றல், வேலைவாய்ப்புத் திறன் மற்றும் புதுமை ஆகியவற்றை மேம்படுத்த தொடர்ந்து மேற்கொண்டு வரும் சிறப்பான பணி களுக்கு கிடைத்த அங்கீ காரமாகும்.
இந்த சிறப்பான சாதனைக்காக விருது பெற்றவர்கள், ஒருங்கி ணைப்பாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை நிர்வாகக் குழு பாராட்டியது. மேலும், நிறுவனத்தின் பங்களிப்பை அங்கீ கரித்த தமிழ்நாடு அரசு அய்சிடி அகாடெமி-க்கும் நன்றியைத் தெரிவித்தது.
