‘துர்காதேவியின் துஷ்டக் குணமோ!’ மகாராட்டிரா: துர்கா சிலையை எடுத்து வந்தபோது விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

வார்தா, அக்.5- மகாராட்டிரத்தில் துர்கா சிலையை எடுத்து வந்தபோது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலியானார்கள்.

மகாராட்டிரத்தின் வார்தா பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்களது ஊரில் தசரா பண்டிகைக்காக துர்கா சிலை அமைக்க முடிவு செய்தனர். இதற்காக சிலை வாங்கி வர ஷேகான் பகுதிக்கு டெம்போ வேனில் நேற்று முன்தினம் (3.10.2026) இரவு புறப்பட்டுச் சென்றனர். சிலையை பெற்றுக்கொண்டு, வேனில் சொந்த ஊருக்குத் திரும்பினர்.

அவர்கள் நேற்று (4.10.2026) அதிகாலை 12.45 மணியளவில் அமராவதி மாவட்டம் தமன்காவ் ரயில் நிலையம் அருகே சம்ருத்தி விரைவுச்சாலையின் ‘சேனல் 97’ பகுதியில் வேனில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சாலையில் பின்னால் விரைவாக வந்த 16 சக்கரங்கள் கொண்ட சரக்கு லாரி, கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற வேன் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.

21 பேர் காயம்

இதில் வேனில் இருந்த 5 பேர் நிகழ் விடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி  உயிரிழந்தனர். மேலும் 23 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் கொண்டு வந்த துர்கா சிலையும் உடைந்து சேதமடைந்தது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. மேலும் காயமடைந்த 21 பேருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *