24 மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை அதே நேரத்தில் முழுமையாகத் தடை விதிக்கவும் முடியாது : உச்சநீதிமன்ற உத்தரவு!

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, அக்.1 நாடு முழுவதும் பட்டாசுகளுக்கு முழு மையான தடை விதிக்கப்படாது என்றும், அதே நேரத்தில் 24 மணி நேரமும் அவற்றை வெடிக்க அனுமதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மக்களின் மத உணர்வு களையும், காற்று மாசுபாட்டி னால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் சமநிலையில் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.

பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுகாதாரக் கேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அர்ஜுன் கோபால் என்பவர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று (30.9.2026) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், “தீபாவளிப் பண்டிகை கொண் டாட்டம் என்பது தசரா கொண்டாட்டத்தில் இருந்தே தொடங்குகிறது. எனவே, பட்டாசுகள் வெடிப்பதற்கு ஒரு கால வரம்பை நிர்ண யிக்க முடியாது’ என்று வாதிட்டார். அதற்கு நீதிபதிகள், கடந்த ஆண்டு பட்டாசு வெடிப் பதற்கான நேரத்தை நீதிமன்றம் நிர்ணயித்ததாக சுட்டிக் காட்டினர்.

இதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அய்ஸ்வர்யா பாட்டீ ஆஜராகி, அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (சிஎஸ்ஐஆர்-நீரி) தயாரித்துள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, சரவெடிகள் மற்றும் பசுமை பட்டாசுகளை குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க லாம் என்று கூறினார்.

இதைக் கேட்ட நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், “பட்டாசுகளுக்கு முழுத் தடை விதிக்க மாட் டோம். அதேபோல நாள் முழுவதும் பட்டாசுகளை வெடிக்கவும் அனுமதிக்க முடியாது. முழு தடை என்பது உணர்வுப் பூர்வமான பாதிப்பை ஏற்படுத்தும். அதே வேளையில், நாள் முழுவதும் வெடித்தால் முதியோர், மருத்துவப் பயனாளிகள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதிப்பு உண்டாகும். குறிப்பிட்ட நேரத்தையும், அனுமதிக்கப்பட்ட பட்டாசு வகைகளையும் நிர்ணயிப்பதே சரியான தீர்வாக இருக்கும்’ என்று கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து, சரவெடிகளின் அளவு, வெடிகளின் எண் ணிக்கை மற்றும் வெடிக்கும் நேர இடைவெளி ஆகிய கட்டுப் பாடுகளுடன் புதிய தலைமுறை சரவெடிகளை உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என்ற ஒன்றிய அரசின் பரிந்துரையை ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், “பேரியம்’ கலக்கப் பட்ட இரண்டாம் தலைமுறை பசுமைப் பட்டாசுகளின் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து தில்லி, போபால், கொல்கத்தா, சென்னை ஆகிய 4 நகரங்களில் திறந்தவெளியில் பரிசோதனை நடத்த ஒன்றிய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதை ஏற்று ஆய்வின் முடிவுகளைச் சமர்ப்பிக்க அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை அக்.15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *