புதுடில்லி, செப்.27 கள்ளச் சாராய உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக மெத்தனாலில் கட்டாயமாக நிறமூட்டி மற்றும் கசப்புச் சுவையூட்டும் பொருள் களைக் கலக்க வேண்டும் என்ற மகாராட்டிர நச்சு விதிகளின் கட்டுப்பாடுகளை எதிர்த்து, பாலாஜி பார்மலின் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக் களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா, கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (25.9.2026) முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது.
நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள், கருத்துகள்
மகாராட்டிர விதிமுறைகள் செல்லாது: இந்த விவகாரத்தில் மகாராட்டிர அரசு கொண்டு வந்த விதிமுறைகள் செல்லாது என அறிவித்த நீதிமன்றம், “இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் தொழில்துறையையே பாதிக்கும் வகையில், மரத்தைப் பாதுகாக்கத் தவறிக் காட்டை இழந்த கதையாக முடிந்துவிடும்” எனக் குறிப்பிட்டது.
முழுமையான மதுவிலக்கு தீர்வல்ல
கட்டாயக் கட்டுப் பாடுகள் மூலம் மதுப்பழக்கத்தைக் குணப் படுத்த முடியாது. முழு மையான மதுவிலக்கு என்பது மது வணி கத்தை நிலத்தடிக்கு கொண்டு சென்று, ஆபத்தான மற்றும் கட்டுப்பாடற்ற கள்ளச்சாராய உற்பத்தியை மட்டுமே அதிகரிக்கும்.
மார்க் ட்வைன் மேற்கோள்: “மதுவிலக்கு என்பது குடிப் பழக்கத்தை மூடிய கதவுகளுக்குப் பின்னாலும், இருட்டான இடங் களுக்கும் கொண்டு செல்கிறதே தவிர, அதைக் குணப்படுத்தவோ குறைக்கவோ இல்லை” என்ற எழுத்தாளர் மார்க் ட்வைனின் வரிகளையும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.
மதுவிலக்கினால்…
வரி வருவாய் இழப்பு, அமலாக்கத்திற்கான கூடுதல் செலவு, காவல்துறை மற்றும் கலால் துறையில் லஞ்சம், ஊழல், சட்டவிரோத சாராய உற்பத்தி, போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரிப்பு முந்தைய சம்பவங்கள். 1960 முதல் கடுமையான மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில், இதுவரை 10-க்கும் மேற்பட்ட பெரிய கள்ளச்சாராய விபத் துகள் நடந்து 600-க்கும் மேற்பட் டோர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தின் பாவ்நகர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சாகர் பகுதிகளில் அண்மையில் நடந்த உயிரிழப்புகளும் இதற்குச் சான்றாகும்.
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள்
மெத்தனாலில் கசப்புச் சுவையூட்டுவது குடிப் பவர்களின் தேவையைத் தடுக்காது. எனவே, கலால் சட்டங்களின் கீழ் மெத்த னால் போக்குவரத்து மற்றும் சேமிப்பைக் கடுமையாக்க வேண்டும். சட்டவிரோதமாக சாரா யப் போக்குவரத்திற்குப் பயன் படுத்தப்படும் வாகனங்களை, நீதிமன்ற உத்தரவு வரும் வரை விடுவிக்கக் கூடாது. கள்ளச்சாராய அவசரச் சூழல்களைக் கையாள மாநில சுகாதாரத் துறை சார்பில் சிறப்புப் பிரிவும், அவசரகால பேரிடர் மேலாண்மைக் கொள் கையும் உருவாக்கப்பட வேண்டும்.
கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியை உடைக்கப் பல்வேறு அரசுத் துறைகள் ஒருங் கிணைந்து செயல்பட வேண்டும்.
