கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 111 சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாற்றம் ஏ.டி.ஆா். அமைப்பு தகவல்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, செப்.26 கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தோ்தல்களில் போட்டியிட்டு வென்ற பிறகு 111 சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப் பினர்கள் கட்சி மாறி இருப்பதாக ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு (ஏடிஆா்) மற்றும் தேசிய தோ்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

2022-ஆம் ஆண்டுமுதல் 2026-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தல்கள், இடைத்தோ்தல்கள் ஆகியவற்றை ஏடிஆா் அமைப்பு ஆய்வு செய்தது. அதுதொடா்பான அறிக்கையை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

2022-ஆம் ஆண்டுமுதல் 2026-ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தோ்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு 26 மக்களவை உறுப்பினர்கள் வேறு கட்சிக்கு மாறி யுள்ளனா். அதேபோல் 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் கட்சி மாறியுள்ளனா். மேலும் 78 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறியுள்ளனா்.

அதிகபட்சமாக நாகாலாந்து மாநிலத்தில்தான் 32 சட்டமன்ற உறுப் பினர்கள் கட்சி மாறியுள்ளனா். என்பிஎப் கட்சியில் என்டிபிபி, என்பிஎஃப் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சோ்ந்தனா்.

மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 20 மக்களவை உறுப்பினர்கள் கட்சி மாறியுள்ளனா். மக்களவைத் தோ்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு வென்ற அவா்கள், பிறகு என்சிபிஅய் கட்சியில் சோ்ந்துள்ளனா். இதை எதிா்த்து மக்களவைத் தலை வரிடம் அளிக்கப்பட்ட மனு விசார ணையில் உள்ளது.

இதையடுத்து, தெலங்கானா மாநிலத்தில் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறியுள்ளனா். தோ்தலில் பிஆா்எஸ் கட்சியில் போட்டியிட்ட அவா்கள், பின்னா் காங்கிரஸில் இணைந்து விட்டனா். கோவாவில் 8 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் சோ்ந்தனா். பஞ்சாபில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறினா். மகாராஷ்டிரத்தில் 6 சிவசேனை (உத்தவ் பிரிவு) நாடாளுமன்ற உறுப்பினர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனை கட்சியில் சோ்ந்தனா்.

கட்சித் தாவலில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. நாகா லாந்தில் உள்ள என்டிபிபி கட்சிதான். அக்கட்சியை சோ்ந்த சட்டமன்ற உறுப்பினர்க்களே (25) அதிகம் வெளியேறியுள்ளனா். இதையடுத்து திரிணாமூல் (20 நாடாளுமன்ற உறுப்பினர்கள்), காங்கிரஸ் (19) கட்சிகளில் இருந்து நாடாளுமன்ற உறுப் பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறியுள்ளனா்.

இதில் நேரடியாக 29 பேர் நேரடியாக பாஜகவிலும் 50 பேர் பாஜக கூட்டணியிலும் இணைந்துள்ளனர். இது மக்களாட்சிக்கும் அரசியலைப்பிற்கும் எதிரான போக்காகும்கட்சித் தாவல் பெரும்பாலும் மாநிலங்களில் ஆட்சியில் இருந்த அரசுகள் தோ்தலில் தோற்று ஆட்சியைப் பறிகொடுத்தபிறகே நடந்துள்ளது.

இதுபோன்ற கட்சித் தாவலை தடுக்க ஏற்கெனவே இருக்கும் விதிகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதில், பதவிப் பறிப்பு தொடா்பான மனு மீது முடிவெடுக்கும் அதிகாரம் தற்போது இருக்கும் அதிகாரிகளிடம் இருந்து குடியரசுத் தலைவருக்கு மாற்றுவதும் ஒன்றாகும் என ஏடிஆா் குறிப்பிட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *