ரத்த அழுத்தத்தை துல்லியமாக கணிக்க ஸ்மார்ட் வாட்ச் சீனாவில் அறிமுகம்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

பெய்ஜிங் செப். 25- சீன நிறுவனமான ஹுவாவே ரத்த அழுத்தத்தை துல்லியமாகக் கணிக்கும் சிறப்பு ‘கஃப்’ வசதியுடன் கூடிய புதிய ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘ஹுவாவே வாட்ச் டி3’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கடிகாரத்தில், ரத்த அழுத்த பரிசோதனைக் கருவிகளில் பயன்படுவது போன்ற சிறிய ‘கஃப்’ அதன் வார்பட்டையிலேயே (ஸ்ட்ராப்) இணைக்கப்பட்டுள்ளது. இது மணிக்கட்டைச் சுற்றி லேசாகக் காற்றில் உப்பி, சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் ரத்த அழுத்த அளவு களைத் துல்லியமாகக் காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து ஹுவாவே நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவக் கருவி போன்ற தோற்றம் இல்லாமல், சாதாரண ஸ்மார்ட்வாட்ச் போலவே 11.3 மி.மீ. தடிமன், 40 கிராம் எடையுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பிளாக், கோல்டு மற்றும் மோகா கோல்டு ஆகிய நிறங்களில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச், இங்கிலாந்தில் 399.99 பவுண்டுகள் (ரூ.50,770) விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இக்கடிகாரம் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் (ஐஓஎஸ்) ஆகிய இரண்டு இயங்குதளங்களிலும் செயல்படும் திறன் கொண்டது” என்று கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *