அஜ்மீர், செப்.23 ராஜஸ்தான் அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (RPSC) அண்மையில் வெளியிட்ட மருத்துவக் கல்வித் துறைக்கான குழந்தைகள் நலப் பிரிவு உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகள், பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு (EWS) குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான
கட்-ஆஃப் விவரங்கள்:
பொதுப் பிரிவு (UR): 61.36
பட்டியல் ஜாதியினர் (SC): 58.06 (பெண்கள்: 48.48)
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC): 57.02
பட்டியல் பழங்குடியினர் (ST): 53.58
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC): 44.78
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் (EWS): 44.01
முரண்பாடு தெளிவான அவலம்
வரலாற்று ரீதியாக சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தள்ளப்பட்டு இடஒதுக்கீடு சலுகை பெறும் பழங்குடியினருக்கான (ST) கட்-ஆஃப் மதிப்பெண்ணை (53.58) விட, EWS பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் (44.01) குறிப்பிடத்தக்க அளவு குறைவாக உள்ளது. இது இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது ராஜஸ்தான், அரியானா, குஜராத், மகாராட்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் EWS சான்றிதழ்களைப் பெறுவதில் முறைகேடுகள் நடப்பதாகவும், தகுதியற்ற நபர்கள் போலிச் சான்றிதழ்கள் மூலம் அரசுப் பணிகளில் சேர்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்கள் வரையிலும் சென்றுள்ளதைச் சுட்டிக்காட்டி சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சமூகப் பின்னடைவை நிவர்த்தி செய்ய உருவாக்கப் பட்ட இடஒதுக்கீட்டு அமைப்பில், EWS மூலம் எளிதாகக் குறைந்த மதிப்பெண்களிலேயே பார்ப்பனர்கள் உயர் பதவிகளை அடையும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
