காஞ்சிபுரம், செப்.22 பிரபந்தம் பாடுவதில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பிரபந்தம் பாடுவதில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரமும் அவர் களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள உபசன்னதிகளான சிறீ வேதாந்த தேசிகன் மற்றும் தாத தேசிகன் சன்னதிகளில் நேற்று (21.9.2026) காலை நடைபெற்ற உற்சவத்தின்போது, திவ்ய பிரபந்தம் மற்றும் மந்திர புஷ்பம் பாடுவது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே மீண்டும் மோதல் உருவானது.
இருதரப்பினரும் ஒருவருக்கொரு வர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்ெகனவே நீதிமன்ற உத்தரவுகள் உள்ள நிலையில், அவை முறையாக மதிக்கப்படவில்லை என இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டினர்.
வடகலை, தென்கலை பிரிவினர் இடையே மோதல் காரணமாக, கோயிலுக்கு வழிபாடு செய்ய வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தலையிட்டு, நீதிமன்ற உத்தரவுகளை முறையாக அமல்படுத்தி, கோயிலில் அமைதியான முறையில் உற்சவங்கள் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
