திருவனந்தபுரம், செப்.22 சபரிமலை அய்யப்பன் கோயிலில் அரவணை பாயசம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக கேரள அரசுத் தரப்பில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளதாக தேஸ்வம் அமைச்சா் கே.முரளீதரன் 20.9.2026 அன்று தெரிவித்தார்.
கேரளத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைகளுக்காக கடந்த செப்.16-ஆம் தேதி திறக்கப்பட்டு, பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனா். இக்கோயிலில், சிவப்பு அரிசி, வெல்லம், நெய் கலந்து தயாரிக்கப்படும் ‘அரவணை பாயசத்திற்கு’ தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து தேவஸ்வம் அமைச்சா் கே.முரளீதரன் செய்தியாளா்களிடம் கூறியிருப்பதாவது: சபரிமலையில் அரவணைப் பாயசம் தட்டுப்பாடு குறித்து மாநில அரசு தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளது. திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத் தலைவா் கே.ஜெயகுமாரிடம் பேசினேன். எதிர்வரும் மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்துக்காக அரவணை பாயசம் தயாரிப்பு ஆலையைப் புதுப்பித்து வருவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
வழக்கமாக கோயில் நடை அடைக்கப்பட்ட பிறகுதான் இந்தப் பணிகள் நடைபெறும். ஆனால், இம்முறை நடை திறந்திருக்கும்போதே பணிகளை மேற்கொண்டுள்ளனராம்.
மண்டல-மகரவிளக்கு பூஜை கால கூட்ட நெரிசலைத் தவிர்ப்ப தற்காக, பக்தா்கள் கோயிலுக்கு வந்து கொண்டிருக்கும் நேரத்தில் புதுப்பிப்புப் பணிகளை மேற்கொண் டதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்தில் இவ்வித ‘பிரசாதம்’ தட்டுப்பாடின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பக்தா் களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வது எங்களின் பொறுப்பு. இதுபோன்ற தட்டுப்பாடு எதிர்காலத்தில் ஏற் படாது என்றும், அரவணை ஆலை புதுப்பிப்புப் பணியை கோயில் நடை அடைக்கப்பட்ட பிறகு மேற்கொள் வதாகவும் அவா் உறுதியளித்துள்ளார்.
தற்போதைய தட்டுப்பாட்டை முன்கூட்டியே கணிக்க தேவஸ்வம் வாரியம் தவறிவிட்டது. எனினும், வாரியத்தின் மீது மாநில அரசால் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடி யாது. நீதிமன்றம் மூலமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றார் அவா்.
