சபரிமலையில் அரவணை பாயசம் தட்டுப்பாடாம்! தேவஸ்தான வாரியத்திற்கும் கேரள அரசுக்கும் இடையே மோதல்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

திருவனந்தபுரம், செப்.22 சபரிமலை அய்யப்பன் கோயிலில் அரவணை பாயசம்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக கேரள அரசுத் தரப்பில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளதாக தேஸ்வம் அமைச்சா் கே.முரளீதரன் 20.9.2026 அன்று தெரிவித்தார்.

கேரளத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைகளுக்காக கடந்த செப்.16-ஆம் தேதி திறக்கப்பட்டு, பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனா். இக்கோயிலில், சிவப்பு அரிசி, வெல்லம், நெய் கலந்து தயாரிக்கப்படும் ‘அரவணை பாயசத்திற்கு’  தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாம்.

இதுகுறித்து தேவஸ்வம் அமைச்சா் கே.முரளீதரன் செய்தியாளா்களிடம் கூறியிருப்பதாவது: சபரிமலையில் அரவணைப் பாயசம் தட்டுப்பாடு குறித்து மாநில அரசு தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளது. திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத் தலைவா் கே.ஜெயகுமாரிடம் பேசினேன். எதிர்வரும் மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்துக்காக அரவணை பாயசம் தயாரிப்பு ஆலையைப் புதுப்பித்து வருவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

வழக்கமாக கோயில் நடை அடைக்கப்பட்ட பிறகுதான் இந்தப் பணிகள் நடைபெறும். ஆனால், இம்முறை நடை திறந்திருக்கும்போதே பணிகளை மேற்கொண்டுள்ளனராம்.

மண்டல-மகரவிளக்கு பூஜை கால கூட்ட நெரிசலைத் தவிர்ப்ப தற்காக,  பக்தா்கள் கோயிலுக்கு வந்து கொண்டிருக்கும் நேரத்தில் புதுப்பிப்புப் பணிகளை மேற்கொண் டதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்தில் இவ்வித ‘பிரசாதம்’ தட்டுப்பாடின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பக்தா் களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வது எங்களின் பொறுப்பு. இதுபோன்ற தட்டுப்பாடு எதிர்காலத்தில் ஏற் படாது என்றும், அரவணை ஆலை புதுப்பிப்புப் பணியை கோயில் நடை அடைக்கப்பட்ட பிறகு மேற்கொள் வதாகவும் அவா் உறுதியளித்துள்ளார்.

தற்போதைய தட்டுப்பாட்டை முன்கூட்டியே கணிக்க தேவஸ்வம் வாரியம் தவறிவிட்டது. எனினும், வாரியத்தின் மீது மாநில அரசால் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடி யாது. நீதிமன்றம் மூலமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றார் அவா்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *