புவனேஸ்வர், செப். 17- ஒடிசா வில் விநாயகர் சதுர்த்தி விழாவில் நீரில் மூழ்கி 9 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.
ஒடிசாவில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. அப்போது, நீர் நிலை களில் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியின்போது பலர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோக நிகழ்வுகள் ஏற்பட்டு உள்ளன. இதில், ஒடிசாவின் கஞ்சம், சுந்தர்கார், பத்ரக், கோரபுட் மற்றும் காலஹண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரத்தில் நீரில் மூழ்கிய நிகழ்வுகளில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.
ஒடிசாவில் விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கும் நிகழ்வின்போது இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இதுபற்றி ஒடிசா தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைக்கான துறையினர் வெளியிட்ட செய் தியில், ஜெகத்சிங்பூர் மாவட்டத் தில் எர்சாமா நகரில் உள்ள கோபால்பூர் பகுதியில் ஒடானலா என்ற இடத்தில் ஆற்றில் மூழ்கி 3 பேர் காணாமல் போயுள்ளனர். தேடுதல் மற்றும் மீட்புப் பணியின் போது 4 உடல்கள் மீட்கப்பட்டன என தெரிவித்து உள்ளது.
இதுதவிர பல்வேறு பகுதிகளி லும் பலர் பலியாகியும், காணாமல் போயும் உள்ளனர். 7 பேர் இது வரை மீட்கப்பட்டு உள்ளனர்.
விநாயகன் உபாயமா? ஒடிசாவில் விநாயகர் சிலை கரைப்பின்போது ஏரியில் மூழ்கி ஆறு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!
Leave a Comment
