குழந்தைகள் விரும்பி உண்ணும் பாக்கெட் உணவுகளில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு அளவு பற்றி எச்சரிக்கை தேவை உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக. 14- பாக்கெட் உணவுகளால் ஏற்படும் ஊட்டச்சத்து சார்ந்த அபாயங்கள் குறித்து நுகர்வோர் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அதிக அளவு சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் முன்புறத்தில் எச்சரிக்கை லேபிள்களை அறிமுகப் படுத்துவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

அப்போது, இந்த விவகாரத்தில் நீதி மன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவு செயல்படுத்தப்படாதது குறித்து ஒன்றிய அரசு வழக் குரைஞரிடம் நீதிபதிகள் கடும் அதிருப்தியை வெளிப் படுத்தினர். நீதிபதிகள் தெரிவித்ததாவது:

“நீதிமன்றத்தை நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்களா? உத்தரவுகளைச் செயல் படுத்தாமல் அலட்சியமாக இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்.

எவ்வளவு அழுத்தங்கள் இருந்தாலும் நீதிமன்ற உத்தரவை நீங்கள் பின் பற்றித்தானே ஆக வேண்டும்? இதுவரை என்ன நடவடிக்கை எடுத் துள்ளீர்கள்? இந்த நாட்டு மக்கள் ஆரோக்கியமாக இருக்கக் கூடாதா? குறிப்பாக வளரும் குழந்தைகள் நலமாக இருக்க வேண்டாமா? பாக்கெட்டுகளில் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுவதில் என்ன தயக்கம்? உற்பத்தியா ளர்களுக்கு இது பிடிக் காமல் போகலாம்; ஆனால், தாங்கள் எதை உட்கொள்கிறோம் என்பதை நுகர்வோர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்” என்று நீதிபதிகள் காரசாரமாகக் கேள்விகளை எழுப்பினர்.

மேலும், நீதிமன்றத்தின் பரிந்துரைகளை ஒன்றிய அரசு தானாக முன்வந்து செயல்படுத்தத் தவறினால், நீதிமன்றமே உரிய உத்தரவைப் பிறப்பிக்க நேரிடும் என்றும் எச்சரித் தனர்.

இறுதியாக, பாக் கெட் உணவுகளில் எச்சரிக்கை வாசகம் பொறிப்பது தொடர்பாக 2 வார காலத்திற்குள் உரிய முடிவை எடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்; தவறினால் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என எச்சரித்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *