டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ரூ.2,000க்கு மேற்பட்ட யு.பி.அய். பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (PIL) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “பிரதமர் மோடி, டிரம்ப் முன் மண்டியிட முடிவு செய்துவிட்டார்”: யு.பி.அய். கட்டணங்கள் தொடர்பான புதிய வணிகர் கட்டண விதிமுறைகளை தொடர்ந்து, ராகுல் காந்தி ஒன்றிய அரசை விமர்சித்து ‘யு.பி.அய். வரி’ எனக் கிண்டல்.
தி இந்து:
* “தற்போதைய மோடி அரசின் கீழ் கல்விச் சுதந்திரம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது”: மோடி தலைமையிலான ஆட்சியில் கல்விச் சுதந்திரம் வெகுவாக குறைந்துள்ளதாக ‘FREE TO THINK 2026’ அறிக்கை வெளியிட்டுள்ளது.
* “சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி இடைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது வாக்காளர்களை அவமதிப்பதாகும்; ஜனநாயக கேலிக்கூத்து”: இத்தகைய நடைமுறையைத் தடுக்க, அரசியலமைப்புச் சட்டம் 324இன் கீழ் தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
தி டெலிகிராப்:
* “உமர் காலித் வழக்கை நடத்த மோடி, அமித்ஷாவுக்கு பிரியங்க் கார்கே சவால்”: சிறையில் உள்ள மாணவர் செயற்பாட்டாளர் உமர் காலித்தை தேச விரோதி என நீதிமன்றம் சொன்னதா? கருநாடக உள்துறை அமைச்சர் பிரியங் கார்கே கேள்வி.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* அரசால் அனைத்திற்கும் மானியம் வழங்க முடியாது”: சாணக்கியரின் தேனீ–தேன் உவமையைச் சுட்டிக்காட்டி, மக்களிடமிருந்து வரி மென்மையாகவும் படிப்படியாகவும் வசூலிக்கப்பட வேண்டும் என யு.பி.அய். கட்டணங்கள் குறித்து நிதி ஆயோக் துணைத் தலைவர் கருத்து.
– குடந்தை கருணா
