புதிய பகுதி “ஸநாதனம் இதுதான்!” “பிறப்புக் கதைகளெல்லாம் ஆபாசமே?”

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

– தினகர ஞானகுருசாமி

வசிஷ்ட ரிஷியின் பிறப்பு பற்றி மூன்று கதைகள் நிலவுகின்றன. ரிக் வேதத்தில் அய்ம்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் வசிஷ்ட மகரிஷியின் பெயர் குறிப்பிடப்படுகிறது. ரிக் வேதம் ஏழாம் மண்டலம் – 33இன்படி ஊர்வசிக்கும் மித்ர மற்றும் வருணனுக்குமிடையில் பிறந்த மானசீக புத்திரர். அதாவது இரு ஆண்களுக்கும் ஒரு பெண்ணிற்கும் மகனாகப் பிறந்தவர் இந்த வசிஷ்ட மகரிஷி. மித்ர மற்றும் வருணனின் விந்துக்கள் நிரம்பிய பானையிலிருந்து ஊர்வசியின் எண்ணத்தினால் உற்பத்தியானவர் இவர்.

இதே முறையில் வருணனின் விந்து நிறைந்த அதே பானையில் உற்பத்தியானவர் அகஸ்தியர். ஒரே பானையில் பிறந்ததால் வசிஷ்டரின் சகோதரர் அகஸ்தியர் என வழங்கப்படுகிறது.

இரண்டாவது கதையானது, தக்கனின் யாகத்தால் இறந்து போகும் வசிஷ்டர் பிரம்மாவினால் உயிர்தெழுந்து வந்தார் என்பது.

மூன்றாவது கதை, இவர் பிரம்மாவினால் உற்பத்தியானவர் என்பது.

இவையெல்லாம் வடமொழி நூல்கள் கூறும் கதைகள்.

ஆச்சர்யப்படும் வகையில், வசிஷ்டர் மற்றும் அகஸ்தியர் இருவரின் பிறப்பு பற்றி தமிழ் காப்பியமான மணிமேகலை விவரிக்கிறது. அது வசிஷ்டர் மற்றும் அகஸ்தியர் பிறப்பினைப் பற்றி ஆபுத்திரனின் திறம் அறிவித்த காதையில் கூறும் போது, பிராம்மண ரிஷிகளின் பிறப்பே கேலிக்குரியதாக உள்ள போது, வாரணாசியிலிருந்து தகாத வழியில் கர்ப்பமுற்று கன்யாகுமரிக்கு யாத்திரை வந்த ‘பிராம்மணப்’ பெண்ணிற்குப் பிறந்த ஆபுத்திரனின் பிறப்பு ஒன்றும் இழிவல்ல என நியாயப்படுத்துகிறது. இதை மணிமேகலை காப்பியம் கூறுகையில்,

முதல் இரு பிராமணர்களான வசிஷ்டரும் அகஸ்தியரும் பிரம்மாவுக்கும் திலோத்தமை என்ற பெண்ணுக்கும் பிறந்தவர்கள்.இவ்வுண்மையை,

“மாமறை மாக்கள் வருங்குலங் கேண்மோ

முதுமறை முதல்வன் முன்னர்த் தோன்றிய

கடவுள் கணிகை காதலஞ் சிறுவ

ரருமறை முதல்வ ரந்தண ரிருவரும்

புரிநூன் மார்பீர் பொய்யுரை யாமோ?”

என பவுத்தக் காப்பியமான மணிமேகலையில் ‘ஆபுத்திரன் திறம் அறிவித்த காதையில்’ உள்ள பாடல் கூறுகிறது.

மணிமேகலை மூலமும் உ.வே.சா அவர்கள் எழுதிய அரும்பதவுரையில் (1898 பதிப்பு) இந்த விளக்கத்தினை நீலகேசி விருத்திமைய திவாகரத்திற் கண்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் பாரதியார் ரிக் வேதத்தில் உள்ளபடி “பிராமணன் யார்” எனும் கட்டுரையில் வசிஷ்டர் ஊர்வசி வயிற்றில் பிறந்ததாகக் குறிப்பிடுகிறார்.

வசிஷ்டரின் பிறப்பு பற்றிய கதையினை Puranic Encyclopaedia குறிப்பிடும்போது,

VASISTHA. A hermit who was the son of Brahma.
1 ) The three births of Vasistha. Vasistha with the radiance of Brahma, is very famous in the Puranas. He had three births.

  1. i) First birth: Vasistha is one of the mental sons of Brahma. This is the first birth of Vasistha.
  2. ii) Second birth: Vasistha who died at the sacrifice of Daksa took birth again from the sacrificial fire of Brahma.

(iii) Third birth: In the third birth Vasistha was born from a pot as the son of Mitravarunas. In this birth Vasistha was the brother of Agastya.

எனக் குறிப்பிடுகிறது.

ஆனால், திருப்பாச்சிலாச்சிராமக் கோயில் வரலாற்று நூலானது தான் படைத்த திலோத்தமையின் அழகில் மயங்கி பிரம்மன் அவளை துரத்திப்பிடித்து அடைந்ததினால் ஏற்பட்ட பாவத்தைச் சிவன் போக்கிய கதையினைக் கூறுகிறது. புராணங்கள் கூறும் இப்பேர்பட்ட கதைகளுக்கு அளவே இல்லை.

நீதி: ஓடிப்பிடித்து விளையாடும் கதையெல்லாம் தேவர்களுக்குள் சகஜம். அதன் பயனாக ரிஷிகளும் முனிகளும் பிறந்து அவர்களால் கட்டமைக்கப்பட்டதுதான் இப்பாரதம் போற்றும் வேதங்களும், உபநிடதங்களும், புராணங்களும், இதிகாசங்களும்.

உதவிய நூல்கள்:

  1. ‘Puranic Encyclopaedia’
  2. கடைச்சங்கப்புலவர்களுள் ஒருவராகிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் அருளிச்செய்த ‘மணிமேகலை மூலமும், கும்பகோணம் கவர்ன்மென்ட் காலெஜ் தமிழ்ப்பண்டிதராகிய உத்தமதானபுரம் வே.சாமிநாதையரெழுதிய அரும்பதவுரையும்’. இவை பாலவனத்தம் ஜமீந்தாரவாகளாகிய இராமநாதபுரம் ம-ள-ள-சிறீ

பாண்டித்துரைத் தேவரவர்கள் உதவியைக்கொண்டு, ஷ சாமிநாதையரால் சென்னை: வெ. நா. ஜூபிலி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்ட நூல்-1898.

  1. ‘பிராமணன் யார்’- பாரதியார் எழுதிய கட்டுரை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *