தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் கொண்டாடப்படும் திருப்பத்தூர் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருப்பத்தூர், செப். 15- திருப்பத்தூர் மாவட்ட கழக கலந்து ரையாடல் கூட்டம் 11.09.2026 மாலை 6.00 மணியளவில் மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் நடைபெற்றது.

பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் விழா ஏற்பாடுகள் குறித்து.

பெ.கலைவாணன் மாவட்டச் செயலாளர் அனைவரையும் வரவேற்று விழாவன்று செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து பேசினார். பங்கேற்ற அனைத்துத் தோழர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

அதனடிப்படையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தந்தை பெரியார் 148ஆவது பிறந்தநாள் முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 100 இடங்களுக்கு மேல் பெரியார் படங்களை வைத்து மரியாதை செய்வது, செப்டம்பர் மாதம் முழுவதும் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கருத்தரங்கம், நடத்தி சமூகநீதி நாளை மிகச் சிறப்பாக கொண்டாடுவது என்றும், செப்டம்பர் 17 மாலை 4.30 மணியளவில் அனைத்துக் கட்சிகள் சார்பில் தந்தை பெரியார் பட ஊர்வலம் நகர வீதிகளில் பறை இசை முழங்க மிகச் சிறப்பாக நடத்துவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்று விழா செலவிற்காக நிதி வழங்கியோர்: எம். ஞானம் – ரு. 1500, விஜயா அன்பழகன் – ரூ. 1000,குமரவேல் – ரூ. 1500, சுப்புலட்சுமி – ரூ. 1000, வே. அன்பு – ரூ. 1000, தாமரை – ரூ. 2,500, மா. சி. பாலன் – ரூ. 1000, கற்பகவள்ளி- ரூ. 1000, கனகராஜ் – ரூ. 500, குரிசல்மணி – ரூ. 500, நாகராசன் ரூ. 500, வ. புரட்சி – 200

இக் கூட்டத்தில் எ.அகிலா (மாநிலப் பொருளாளர் மகளிரணி) மா.சி.பாலன் (மாவட்டக் காப்பாளர்) சி.தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைத்தலைவர்) காளிதாஸ் (நகர தலைவர்) எம்.ஞானம் (விடுதலை வாசகர் வட்டத் தலைவர்) வ. புரட்சி (விடுதலை வாசகர் வட்டச் செயலாளர்), எம்.என்.அன்பழகன் (விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர்) வே. அன்பு (மாவட்டத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம்) விஜயா அன்பழகன் (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) இரா. கற்பகவள்ளி (மாவட்டத் தலைவர் மகளிரணி) தாமரை (நகர காப்பாளர் மகளிரணி)
நா. சுப்புலட்சுமி சி. சபரிதா (மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர்), பெ. ரா. கனகராஜ் (கந்திலி ஒன்றியத் தலைவர்) நாகராசன் (கந்திலி ஒன்றிய செயலாளர்) இராஜேந்திரன் (சோலையார்பேட்டை அமைப் பாளர்), மோ. நித்தியானந்தம் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), கே. மோகன் (மாவட்ட தலைவர், பெ. கட்டுமான தொழிலாளரணி), அக்ரி அரவிந்த் (நகர இளைஞரணி செயலாளர்) மு. வெற்றி (மாத னூர் ஒன்றியத் தலைவர்) சரவ ணன் (இலக்கிநாயக்கன்பட்டி கிளைத்தலைவர்)லட்சுமணன் (லக்கிநாயக்கன்பட்டி கிளைச் செயலாளர்) பிரபாகரன் (கற்பி பயிலகம்) அன்பு (நகர மாணவரணி செயலாளர்) மாணவரனி சேர்ந்த தோழர்கள் தர்சினி, கோ. திருப்பதி (மாவட்டச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்) குரிசல்மணி (புரட்சிகர இளைஞர் முன்னனி) உதய குமார் (புரட்சிகர இளைஞர் முன்னனி), தி.நவநீதம் (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) இசைபிரியன் (மாணவர் கழகம்) ரகு (மாணவர் கழகம்) இன்பா ஆகியோர் பங்கேற்றனர். லாவண்யா (மகளிரணிப் பொறுப்பாளர்) நன்றி தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *