வாக்காளப் பெருமக்களே, சிந்திப்பீர்! மருத்துவத் துறையில் ‘திராவிட மாடல்’ அரசின் சாதனை!

2 Min Read

பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் முதுகலை மருத்துவ இடங்களில் 50% இடங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு (Service Candidates) ஒதுக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்திய மருத்துவக் கவுன்சில் (MCI) கொண்டு வந்த புதிய விதிகளால் இந்த ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, ஊக்க மதிப்பெண்கள் (Incentive Marks) வழங்க வழிவகை செய்யப்பட்டது.

அரசு மருத்துவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு இந்த விதியை எதிர்த்து உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தின.

அரசின் வாதம்

கிராமப்புறங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டால் மட்டுமே, அவர்கள் உயர்கல்வி முடித்த பின் மீண்டும் அரசு மருத்துவமனைகளுக்கே வந்து ஏழை மக்களுக்குச் சேவை செய்வார்கள்.

உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட அமர்வு, ‘‘மாநில அரசுகளுக்கு முதுகலை மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு எனத் தனி உள் ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உண்டு’’ என வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியது (30.8.2020).

(அரசு ஆணை எண்: 462, நாள்: 7.11.2020)

உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு இதற்கான அரசாணையை வெளியிட்டது. இதன்மூலம், மாநில ஒதுக்கீட்டில் உள்ள முதுகலை மருத்துவ இடங்களில் 50% இடங்கள் அரசு மருத்து வர்களுக்கு சிறப்பாக ஒதுக்கப்பட்டது.

இந்த ஒதுக்கீட்டில் பயிலும் மருத்துவர்கள், படிப்பு முடிந்த பிறகு குறிப்பிட்ட ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற விதியும் உறுதிப்படுத்தப்பட்டது.

கிராமப்புற சேவை

கிராமப்புற மற்றும் மலைவாழ் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் தட்டுப்பாடின்றி பணிபுரிய இது உந்துதலாக உள்ளது. அரசு பொது மருத்துவமனைகளில் உயர் சிறப்பு சிகிச்சை அளிக்கும் நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகை செய்கிறது.

ஏழை மாணவர்களும் அரசுப் பணியில் இருந்து கொண்டே உயர்கல்வி பெற இது ஒரு ஏணியாக அமைந்துள்ளது.

அதேபோல, உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளிலும் (Super Speciality DM/M.ch) தமிழ்நாடு அரசு 50% வழங்கலாம் என்று சட்டப் போராட்டம் நடத்தி, உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெற்றது (16.3.2022).

இந்த வகையில், தமிழ்நாடு அரசு, இந்தியாவிற்கே வழிகாட்டியுள்ளது.

மருத்துவத் துறை வளர்ச்சியில், தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு நோயாளிகளில் 40 விழுக்காட்டினர் தமிழ்நாட்டை நோக்கியே வருகின்றனர்.

சென்னை, இந்தியாவின் ‘‘மருத்துவத் தலை நகரம்’’ என்று அழைக்கப்படுகிறது.

மக்களின் மருத்துவ சேவையில் அரும்பணியாற்றி வரும் ‘திராவிட மாடல்’ அரசு மீண்டும் மலர வேண்டாமா?

வாக்களிப்பீர் தி.மு.. கூட்டணிக்கே!

வெல்லுவோம்

தலைநிமிர்ந்து செல்லுவோம்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *