தந்தை பெரியார் அவர்களின் 148 ஆவது பிறந்தநாள் விழா பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஆத்தூர், செப். 15- ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் அவர்களின் 148 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து பள்ளி,கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி,ஓவியப் போட்டி வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி கருத்தரங்க அறையில் 11.9.2026 அன்று நண்பகல் 11 மணி அளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர்.இரவீந்திரன் தலைமை உரையாற்றினார். ஆத்தூர் மாவட்ட கழக த் தலைவர் அ.சுரேஷ் வரவேற்புரை ஆற்றினார்.தமிழ்த்துறைத் தலைவர் மு.முருகேசன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வ.முருகானந்தம்  முன்னிலை உரையாற்றினர். மாவட்ட கழகச் செயலாளர் நீ சேகர், ஆத்தூர் பகுத்தறிவாளர் கழக விஜய் ஆனந்த், சமூக ஆர்வலர் பெ.காளிதாஸ், திராவிடர் கழக வேப்பம்பூண்டி து.இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரா.மாயக்கண்ணன் தொடக்க உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் 23 ஆண்களும், 31 பெண்களும் 50க்கும் மேற் பட்ட மாணவர்கள் கலந்து கொண் டனர். பேச்சுப் போட்டிக்கு தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் அய்.அம்பேத்கர், சமூக ஆர்வலர் பெ.காளிதாஸ், ஆத்தூர் பகுத்தறிவாளர் கழக விஜய் ஆனந்த் ஆகிய மூவரும் நடுவர்களாக செயல்பட்டனர்.

கல்லூரி அளவில் நடந்த பேச்சுப் போட்டியில் முதல் பரிசு மோ.சரண்யா (அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி இரண்டாம் ஆண்டு தமிழ் இலக்கியம்), இரண்டாம் பரிசு மு.மோனீஷ்வரன் (முதுகலை தமிழ் இலக்கியம், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி), மூன்றாம் பரிசு பி.ஆர்த்தி (மூன்றாம் ஆண்டு இளம் அறிவியல் ஜெம்கேட்ஸ் கல்லூரி ஆத்தூர்), ஆறுதல் பரிசு த.சவுமியா, எஸ்.மோனிகா, எஸ்.ரோகிணி, கே.கீர்த்தனா, எம்.மித்ரா ஆகியோர் பேச்சுப் போட்டியில் கல்லூரி அளவில் ஆறுதல் பரிசு பெற்றனர்.

பள்ளி அளவில் நடந்த பேச்சுப் போட்டியில் முதலிடம் ஆர்.கோகுல் (அரசு மேல்நிலைப்பள்ளி ஆத்தூர்). இரண்டாமிடம் மா.இளநிலவன் (அரசு மேல்நிலைப்பள்ளி ஆறகழூர்), மூன்றாமிடம் மா.யாழினியன்  (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெரியேரி), ஆறுதல் பரிசு பே.கிருபா அரசு உயர்நிலைப் பள்ளி வடசென்னிமலை ஆகியோர் பெற்றனர்.

ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நடந்த ஓவியப் போட்டியில் முதலிடம் பே.சம்ரீதா (அரசு உயர்நிலைப்பள்ளி வடசென்னிமலை), இரண்டாமிடம் அய்.யாழினி (அரசு உயர்நிலைப்பள்ளி வடசென்னிமலை), மூன்றாமிடம் பி.மே.கு எழிலன் (அரசு உயர்நிலைப்பள்ளி வடசென்னிமலை),

பத்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நடந்த ஓவியப் போட்டியில் முதலிடம் ச.தீபன் (அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆத்தூர்), இரண்டாமிடம் எஸ்.குரு (அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆத்தூர்), மூன்றாமிடம் எஸ்.சாரதி (அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆத்தூர்), ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ3000, இரண்டாம் பரிசு ரூ2000, மூன்றாம் பரிசு ரூ1000, ஆறுதல் பரிசு ரூ200 வழங்கப்பட்டது.கல்லூரி, பள்ளி அளவில் நடந்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆத்தூர் பெரியார் பெருந்தொண்டர் அ.தங்கவேல் (வயது 103)நினைவாக பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வா.தமிழ் பிரபாகரன், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் அறிவுச்செல்வம் ஆகியோர் பரிசுத்தொகையினை வழங்கினர்.. ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைவாசல் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி அமைப்பாளர் தே. நிவாஸ் சார்பாக பரிசுத்தொகை வழங்கப்பட்டது. ஆறுதல் பரிசு தலைவாசல் வழக்குரைஞர் கோவிந்தன், வரகூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரங்க.சங்கரய்யா ஆகியோரின் சார்பாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவாக  தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் அய்.அம்பேத்கர் நன்றி உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *