விழுப்புரம், செப்.15- (13.9.2026) காலை 11மணிக்கு விழுப்புரம்நகர தலைவர் இரு.இராசேந்திரன் இல்லத்தில் மாவட்ட கலந்துறவாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் சே.வ.கோபன்னா தலைமையில், மாவட்டச் செயலாளர் அரங்க.பரணிதரன் முன்னிலையில் உற்சாகமாக நடைபெற்றது.
காப்பாளர் கொ.பூங்கான், மாவட்டத் துணைச் செயலாளர் ஏ.இரமேசு கோலியனூர் ஒன்றியத் தலைவர் சு.மாறன், செயலாளர் ச.பழனிவேல், அமைப்பாளர் இராதாமணாளன், முகையூர் ஒன்றிய அமைப்பாளர் ச.தண்டபாணி, பெரியார் பெருந்தொண்டர் சென்னகுனம் சுந்தரமூர்த்தி, கண்டாச்சிபுரம் நகர தலைவர் நாகராசன், நகர செயலாளர் முருகன், சிவராமன், இளைஞரணி அன்பரசன், மகளிரணி அய்யம்மாள் இராசேந்தின் உள்ளிட்ட தோழர் களின் கருத்துரைக்குப்பின் தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டது.
அறிவாசான் தந்தை பெரியார் 148-ஆவது பிறந்த நாளான செப். – 17 அன்று புத்தாடையுடுத்தி, இனிப்பு வழங்கி, கழகக் கொடியேற்றி, தந்தை பெரியார் சிலை, படங் களுக்கும் மாலையணிவித்து உறுதிமொழியேற்பது என தீர்மானிக்கப்பட்டது.
விழுப்புரத்தில் 27.9.2026இல் சமூகநீதிநடை!
வளவனூரில் குடும்ப விழா, கிளைக் கழகங்கள்தோறும் தெரு முனைக் கூட்டங்கள் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மணிராஜ் நன்றி கூறி நிறைவு செய்தார்.
