விழுப்புரத்தில்… தந்தைபெரியார் 148 – ஆவது பிறந்த நாள் மகிழ்வாக, சமூகநீதி நடை மாரத்தான் மாவட்டக் கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு !

இணையவழி கையெழுத்து இயக்கம்

விழுப்புரம், செப்.15- (13.9.2026) காலை 11மணிக்கு விழுப்புரம்நகர தலைவர்   இரு.இராசேந்திரன் இல்லத்தில் மாவட்ட கலந்துறவாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் சே.வ.கோபன்னா தலைமையில், மாவட்டச் செயலாளர் அரங்க.பரணிதரன் முன்னிலையில் உற்சாகமாக நடைபெற்றது.

காப்பாளர் கொ.பூங்கான், மாவட்டத் துணைச் செயலாளர் ஏ.இரமேசு கோலியனூர் ஒன்றியத் தலைவர் சு.மாறன், செயலாளர் ச.பழனிவேல், அமைப்பாளர் இராதாமணாளன், முகையூர் ஒன்றிய அமைப்பாளர் ச.தண்டபாணி, பெரியார் பெருந்தொண்டர் சென்னகுனம் சுந்தரமூர்த்தி, கண்டாச்சிபுரம் நகர தலைவர் நாகராசன், நகர செயலாளர் முருகன், சிவராமன்,  இளைஞரணி அன்பரசன், மகளிரணி அய்யம்மாள் இராசேந்தின் உள்ளிட்ட தோழர் களின் கருத்துரைக்குப்பின் தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டது.

அறிவாசான் தந்தை பெரியார் 148-ஆவது பிறந்த நாளான செப். – 17 அன்று புத்தாடையுடுத்தி,  இனிப்பு வழங்கி, கழகக் கொடியேற்றி, தந்தை பெரியார் சிலை, படங் களுக்கும் மாலையணிவித்து உறுதிமொழியேற்பது என தீர்மானிக்கப்பட்டது.

விழுப்புரத்தில் 27.9.2026இல் சமூகநீதிநடை!

வளவனூரில் குடும்ப விழா, கிளைக் கழகங்கள்தோறும்  தெரு முனைக் கூட்டங்கள் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மணிராஜ் நன்றி கூறி நிறைவு செய்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *