குளிர்பானம் குடிப்பவரா நீங்கள்?
குளிர்பானத்தில் வைட்டமின், தாது உப்புக்கள், மாவுச் சத்து எதுவும் இல்லை.
வயிற்றில் அமிலச் சுரப்பு (அஸிடிட்டி) உருவாகி செரிமானக் கோளாறு வரும்.
வயிற்றில் வாயுத் தொல்லை உருவாகும்.
உடல் பருமன் ஏற்படும்.
செயற்கைக் கலர் (சிந்தடிக்) சேர்க்கப்படுவதால் உடல்நலம் கெடும்.
சுவைக்குச் சேர்க்கப்படும் இரசாயனங்களால் கேடு.
நார்ச்சத்து இல்லை.
கொடுக்கும் காசுக்கு பயன் இல்லை கேடு அதிகம்.
குளிர்பானத்திற்குக் கொடுக்கும் காசுக்கு திராட்சை பழத்தை வாங்கி நன்றாக அலசி மென்று சாப்பிட்டால் எவ்வளவு பயன் தெரியுமா?
திராட்சையின் நன்மைகள்
வைட்டமின்கள், கார்போ ஹைட்ரேட், தாது உப்புக்கள் கிடைக்கிறது.
நார்ச்சத்து முழுமையாய் கிடைக்கும்.
இதயம் வலுப்பெறும்
மென்று சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள், தடைகள் வலுப்பெறும்.
உடலுக்குத் தேவையான குளுக்கோஸ் கிடைக்கும்.
உமிழ் நீர் அதிகம் கலப்பதால் உடல் நலம் பெருகும்.
நோய் எதிர்ப்பாற்றல் வளரும்.
எலும்புகள் வலுப்பெறும்.
குறிப்பு: பழச்சாறு பருகுவதைவிட பழமாக மென்று சாப்பிடுவதே சிறந்தது. பழச்சாறு சாப்பிட்டால் அய்ஸ் சேர்க்க வேண்டாம். சர்க்கரை சேர்க்க வேண்டாம்.
அய்ஸ் அசுத்த நீரில் செய்கிறார்கள். அதிலுள்ள கிருமி அய்ஸ் மூலம் நமக்கு வந்து பல நோய்களை உண்டாக்கும்.
