எஸ்.அய்.ஆர். பணி கருநாடகத்தில் இதுவரை 24.97 லட்சம் வாக்காளர்களுக்கு அறிவிக்கை

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெங்களூரு, செப்.13- கருநாடகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.அய்.ஆர்.) நடந்தது. இதில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டது. 1.05 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. தற்போது வரைவு வாக்காளர் பட்டியலில் 4 கோடியே 46 லட்சத்து 413 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் ஆண் வாக்காளர்கள் 2.21 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 2.24 கோடி பேரும், 2 ஆயிரத்து 874 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். 43 லட் சத்து 81 ஆயிரத்து 760 வாக்காளர்களுக்கு ஆதாரம் கேட்டு அறிவிக்கை அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களின் பெயர்களில் முரண்பாடுகள் இருப்பதால் இந்த அறிவிக்கைஅனுப்பப்படுகிறது. இதில் இதுவரை 24 லட்சத்து 97 ஆயிரத்து 75 வாக்காளர்களுக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

18 லட்சத்து 84 ஆயிரத்து 685 பேருக்கு இன்னும் அறிவிக்கை அனுப்பப்படவில்லை. அதாவது 56.99 சதவீதம் பேருக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அறிவிக்கை அனுப்பியதில் 7 லட்சத்து 3 ஆயிரத்து 710 பேர் ஆதாரங்களை வழங்கியுள்ளனர். இந்த முரண்பாடுகள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *