தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா செப்.20 பெரியார் நடை- ஓட்டத்தில் பங்கேற்போம் சோழிங்கநல்லூர் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 11- சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 6.9.2026 அன்று மாலை கோவிலம்பாக்கம் விடுதலை நகர் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் க.தமிழினியன் தலை மையில் நடைபெற்ற கூட்டத்தை மாவட்டத் துணைத் தலைவர் ஆர். கலைச்செல்வன் கடவுள் மறுப்புக் கொள்கை முழக்கத்துடன் தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு நோக்கவுரையாற்றினார். தமிழக மூதறிஞர் குழுத் தலைவர் டாக்டர் சாமிநாதன் தேவதாஸ் சிறப்புரையாற்றினார்.

செப்.17 தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி பெரியார் சிலைகள் மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்குவது; செப்.20 பெரியார் நடை–ஓட்டத்தில் பங்கேற்பது; பெரியார் திடலில் நடைபெறும் குடும்ப விழாவில் குடும்பத்துடன் கலந்து கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

மேலும், பெரியார் கொள்கை கையடக்க நூல்களைப் பொது மக்களிடம் வழங்கி கொள் கைப் பரப்புப் பணியை மேற்கொள்வது, பெரியார் பிறந்தநாளையொட்டி இனிப்புப் பெட்டகங் களைப் பெற்று வழங்குவது, அக்டோபர் மாதத்திற்குள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் அரங்க ராஜா, தேவி சக்திவேல், பி.சி. ஜெயராமன், புலவர் சங்கரலிங்கம், த. ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவில் கழகத் தொழிலாளர் அணித் தோழர் மணி கண்டன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *