காஞ்சிபுரம், செப். 11- காஞ்சிபுரம் மாவட்ட கழகக் காப்பாளர் ச.வேலாயுதம் அன்னையார் லட்சுமி அம்மாள்(வயது 86) கடந்த 23.8.2026 அன்று முதுமை காரணமாக மறைவுற்றார். அன்னாரின் படத்திறப்பு 5.9.2026 மாலை 6.00 மணியளவில், காஞ்சிபுரம், ஆலடிவீதியில் உள்ள காப்பாளர் இல்லத்தில், காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி தலைமையில் நடைபெற்றது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகச் சொற்பொழிவாளர் நாத்திகம் நாகராசன், திமுக வட்டச் செயலாளர் சிட்டிபாபு ஆகியோர் அம்மையாரின் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினர்.
மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளரும், கழகச் சொற் பொழிவாளருமான முனைவர் காஞ்சி பா.கதிரவன், மாவட்ட கழக துணைச் செயலாளர் சீத்தா வரம் ஆ.மோகன், மாவட்ட பகுத் தறிவாளர் கழகத் தலைவர் பா. இளம்பரிதி, சுங்குவார் சத்திரம் பகுதி கழக அமைப்பாளர் நடராஜ், வாலாஜாபாத் ஒன்றியக் கழக அமைப்பாளர் எஸ். செல்வம், மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் இ. ரவீந்திரன், குடும்ப உறவினர்கள் திருநீலகண்டன், திலகவதி அம்மாள், குமுதா, தீபிகா உள்ளிட்டோர் வீரவணக்கம் செலுத்தி உரையாற்றினர்.
நிறைவாக லட்சுமி அம்மாள் அவர்களின் இளைய மகனும், மேனாள் நகர மன்ற உறுப்பினருமான திமுக தோழர் பாலு நிறைவுரை ஆற்றி நன்றி கூறினார்.
லட்சுமி அம்மாகளின் விழிகள் கொடையாக வழங்கப்பட்டன. தந்தை பெரியாரின் சுயமரியாதை, மனிதநேயக் கொள்கைகளும் விழிக்கொடை, உடற்கொடை பற்றிய கழகத் தோழர்கள் கூறிய செய்திகளும் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை பெரிதும் ஈர்த்தன.
