தந்தை பெரியார் பிறந்தநாளை எழுச்சியுடன் கொண்டாட மண்ணச்சநல்லூர் கலந்துரையாடலில் முடிவு

இணையவழி கையெழுத்து இயக்கம்

மண்ணச்சநல்லூர், செப். 11- இலால்குடி கழக மாவட்டம் மண்ணச்ச நல்லூர் ஒன்றியம் மற்றும் நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நேற்று (10.9.2026) காலை எதுமலை சாலையில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

ஒன்றிய தலைவர் கு.பொ.பெரியசாமி தலைமை தாங்க மாவட்ட செயலாளர் ஆ.அங்க முத்து முன்னிலை வகித்தார்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 148ஆவது பிறந்தநாளை ஒன்றியம் முழுவதும் தோழர்களின் இல்லங்களில் பெரியார் மன்றத்தில் கழகக் கொடி யேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண் டாடுவதுடன் இறுதியில் மதியம் சிறுகனூரில் அமைந் துள்ள பெரியார் உலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பெருமளவில் தோழர்கள் கலந்து கொள்வதுடன், வரும் செப்டம்பர் 20ஆம் தேதி பெருவளப்பூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் கூட்டத்திலும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *