மீஞ்சூர், செப். 10– கும்மிடிப்பூண்டி மாவட்டத்தின் சார்பில் 5/9/2026 அன்று மாலை 6 மணி அளவில் மீஞ்சூரில் ஆசிரியர் டார்வி இல்லத்தில் கழகத்தின் சார்பாகவும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாகவும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன் தலைமை வகித்தார்.
புழல் ஒன்றிய செயலாளர் வடகரை உதயகுமார், தலைவர் ஜெகத் விஜயகுமார், பொன்னேரி நகரத் தலைவர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஓவியர் ஜனாதிபதி வரவேற்புரை கூட்டம் தொடங்கியது. மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர் செல்வம் கூட்டத்தின் நோக்கம் குறித்தும், வருகின்ற செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்த நாளை ஒவ்வொரு குடும்பமும் புத்தாடை எடுத்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என விளக்கினார். அந்த இணைப்பு அடையாறு ஆனந்த பவனில் வாங்க வேண்டும் என்று அதற்கான காரணத்தையும் கூறினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பொறுப்பாளர்களும் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களும் தங்களுடைய கருத்துக்களை வரிசை யாக ஒருவர் சொன்னார்கள் அடிப் படையில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொன்னேரி ஏலியம்படியில் செப்டம்பர் 17 தேதியில் தந்தை பெரியார் பிறந்தநாள் குருதிக் கொடை முகாமிற்கு பெருவாரியா ளர்கள் தோழர்கள் கலந்து கொண்டு குருதிக் கொடைவழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
தந்தை பெரியாரின் சிலைக்கு அந்தந்த பகுதியில் இருக்கின்ற தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும், சிலை இல்லாத ஊர்களில் தந்தை பெரியாரின் படத்தை வைத்து மாலை அணிவிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
20ஆம் தேதியில் தேதி திரு வள்ளூரில் நடக்கும் இருக்கும் நடை பயணத்திற்கு கழகத் தோழர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும், 27 ஆம் தேதி நடக்கும் குடும்ப விழாவிற்கு பெரியார் திடலுக்கு குடும்பத்தோடு வர வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அடையாறு ஆனந்த பவன் தந்தை பெரியார் பிறந்த நாள் இனிப்பு வாங்கி மற்றவர்களுக்கு பரிசளிக்க வேண்டும் என்று தீர் மானிக்கப்பட்டது.
நீட் எதிர்ப்பு இருசக்கரப் பேரணியில் கலந்து கொண்ட இளைஞரணித் தலைவர் சோழவரம் சக்கரவர்த்திக்கு பயனாடை அணி வித்து அவருக்கு நன்றியை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியாரின் பிறந்த நாள் பேச்சுப்போட்டி ஓவியப் போட்டி நடத்தி மாணவர்களுக்கு பரிசும் கேடயமும் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
செந்துறை ராஜேந்திரன் தோழர்களுக்கு கழகத்தின் கோட் பாடுகளும் தந்தை பெரியாரின் தத்துவங்கள் குறித்து நீண்டதொரு உரையாற்றினார்.
கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் ந.கஜேந்திரன், இளைஞர் அணி தலைவர் சோழவரம் சக்கர வர்த்தி, பொன்னேரி செல்வராஜ், பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் ஆசிரியர் தாஸ், மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் நதியா, மீஞ்சூர் நகர பொறுப்பாளர்கள் வெங்கடாஜலபதி, சகாயம் கிறிபன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஆசிரியர் டார்வியின் நன்றியுரையுடன் இனிதே நிறைவு பெற்றது.
