திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழறிஞர் கலைஞர் 103ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம்

1 Min Read

கோட்டைப்பட்டினம், ஜூன் 17– திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழறி ஞர் கலைஞர் 103ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம் (10.06.2026) கோட் டைப்பட்டினத்தில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அறந்தாங்கி மாவட்ட கழகச் செயலாளர் ச.குமார் தலைமை தாங்கினார். ஆவுடையார் கோவில் ஒன்றிய இளைஞரணி ம.சிவபாலன் வரவேற்புரை ஆற்றினார். க.மாரிமுத்து மாவட்டத் தலைவர் க.முத்து. பெரியார் வீர விளையாட்டு கழகம்  ந.சிவசாமி. மணமேல்குடி ஒன்றியத் தலைவர்
க.மாதவன் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் மாநில மாணவர் கழக இணைச் செயலாளர் இளமாறன் பங்கேற்று பெரியார் அண்ணா கலைஞர் அவர்களின் தொண்டுகளையும் அவர்கள் தமிழ் சமுதாயத்திற்கு ஆற்றிய பங்கினையும் இளம் தலைமுறைக்கு எடுத்துரைத்தார்.

சில்லத்தூர் சிற்றரசு கலைஞரின்  கலை இலக்கியங்களில் அவர் ஆற்றிய பங்கினை மக்களிடம் எடுத்துக் கூறி உரையாற்றினார். இந்நிகழ்வில் தோழர் கரு .ராமநாதன் சிபிஅய்எம்
மற்றும் பொன்ராஜ் அறந்தாங்கி மாவட்டச் செயலாளர் தமிழ் புலிகள் கட்சி
மற்றும் திராவிடர் முன்னேற்றக் கழகத் தோழர்கள் மற்றும் பெரியார் பிஞ்சுகள் பரிதி இளவழுதி பகலவன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக   அ.நாகூரான் நன்றியுரை ஆற்றினார்…

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *