ஆத்தூர், செப். 10- திராவிடர் கழகத்தின் மாவட்ட கலந்துரையாடல் ஆத்தூர் கழக மாவட்டத்தின் சார்பில் 6.9.2026 அன்று காலை 11.30 மணியளவில் த. வானவில் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை மாவட்ட தலைவர் அ. சுரேஷ் தலை மையேற்றார் வருகை தந்த அனைவரையும் மாவட்டச் செயலாளர் நீ. சேகர் வர வேற்று பேசினார்.
முன்னிலை மாவட்டக் காப்பாளர்கள் த.வானவில், இரா.விடுதலை சந்திரன், சேலம் மாவட்டத் தலைவர் வீரமணிராஜீ, பக மாவட்டத் தலைவர் வ.முரு கானந்தம், நகர தலைவர் வெ.அண்ணாதுரை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். கருத்துரை பக மாநில அமைப்பாளர் இரா.மாயக்கண்ணன் கூறினார்.
நோக்கவுரையாக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெய ராமன் பல்வேறு செய்திகளை விளக்கி குறிப்பாக செப்டம்பர் 3ஆம் தேதி தலைமை செயற்குழுவில் எடுக்க பட்ட தீர்மானத்தின்படி தந்தை பெரியார் அவர் களின் பிறந்தநாள் விழாவை நன்றிப் பெருக்கு விழாவாக கொண்டாட வேண்டும் அய்யா அவர்களின் பிறந்தநாளில் கோலாகல மாக எழுச்சியுடன் கழக குடும்பத்தவர்கள் அனைவரும் புது கருப்பு ஆடைகளை அணிந்து வந்து அனைத்துத் தோழமை இயக் கங்கள் குடும்ப நண்பர்கள் தங்களது உறவுகள் என பெருந்திரளாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி காலை முதல் மாலை வரை சிறப்பாக பிறந்தநாளை கொண்டிடவும், கழக மாவட்டத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைகள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்யவேண்டும் எனவும், செப்டம்பர் 17 தொடங்கி அக்டோபர் 10 வரை வார விடுமுறை தொடர்ந்து கழகக் குடும்ப விழா நடத்துதல், அதில் பல சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடத்துதல், ஒவ்வொரு குடும்பத்தவரும் ஒன்று கூடி தங்களது அனுபவங்களை பகிருதல் மதியம் சுவையான அசைவ உணவு உண்டு களித்து மாலையில் ஒன்று கூடி குழு ஒளிப்படம் எடுத்தல், இளைஞர்கள் மாணவர்களுக்கான மாரத் தான் போட்டி கருப்பு டிசர்ட் அணிந்து தொடங்குதல், வீதி நாடகம், பொம்மலாட்டம் போன்ற நிகழ்ச்சி நடத்துதல் பல அரிய தகவல்களுடன் தந்தை பெரியாரின் புத்தகம் வழங்குதல் போன்ற வற்றை எடுத்துரைத்து ஊ.ஜெய ராமன் பேசினார்.
மேலும் தம்மம்பட்டி நகரத் தலைவர் வீராசாமி மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்களிடம் விடுதலைச் சந்தா வழங்கி மகிழ்ந்தார். இனிப்பு தேவை என ஆத்தூர் கழகத் தோழர்கள் சுமார் ரூ.14800க்கு பதிவு செய்துள்ளார்கள்
இந்நிகழ்வில் நரசிங்கபுரம் நகரத் தலைவர் வே.மணி, ஒன்றியச் செயலாளர் ஆ. செல்வம், தம்மம்பட்டி நகர தலைவர் வீராசாமி, மாவட்ட இளைஞரணித் தலைவர் இரா.கார்முகிலன், புத்திரகவுண்டம் பாளையம் ரமேஷ் என அனைவரும் வருகை தந்து சிறப்பு செய்தார்கள். இந்நிகழ்வுக்கு ப.க. மாவட்ட செயலாளர் அ.அறிவுசெல்வம் அனைவ ருக்கும் தேநீர் வழங்க ஏற்பாடு செய்தார். நிறைவாக மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் ச.அஜித் அனை வருக்கும் நன்றி கூறினார்.
