குரூப்-2, 2 ஏ தேர்வில் புதிய பணியிடங்கள் சேர்த்து அறிவிப்பு!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 7- ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி அன்று வெளியிட்டது.

அதன்படி, குரூப்-2 பதவிகளில் 41 காலியிடங்கள், குரூப்-2 ஏ பதவிகளில் 780 இடங்கள் மொத்தம் 821 காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன. தேர்வுக்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு வருகிற 9.9.2026 முடிவடைகிறது.

பட்டதாரிகளும், முதுகலை பட்டதாரிகளும் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

இதற்கிடையே, குரூப்-2, 2-ஏ தேர்வில் புதிய பணியிடங்கள் சேர்க்கப் பட்டுள்ளன. அதோடு காலியிடங்களின் எண்ணிக்கையும் உயர்த்தப் பட்டுள்ளது.

குரூப்-2 ஏ தேர்வில் தமிழ்நாடு தலைமைச் செயலக உதவியாளர் (நிதிப்பிரிவு) காலியிடங் களின் எண்ணிக்கை 7-லிருந்து 17 ஆக அதிகரிக்கப்படுகிறது. மேலும், குரூப்-2 தேர்வில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு பணிகள் துறை நன்னடத்தை அலுவலர் (காலியிடங்கள் 2) புதிதாக சேர்க்கப்படுகிறது.

அதேபோல், குரூப்-2 ஏ தேர்வில், தொழிற்கூட்டுறவு சங்கங்களின் மேற்பார்வை யாளர் (காலியிடங்கள் 10), குழந்தைகள் நலன், சிறப்புப் பணிகள் துறை உதவியாளர் (காலி யிடங்கள் 3) ஆகிய பதவிகள் புதிதாக சேர்க்கப் படுகின்றன. இதனால் ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கை 846 ஆக அதிகரித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *