சென்னை, செப்.28- மதுராந்தகம் அருகே கொங்கரையில் மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்விற்கு தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித் துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட் டுள்ளதாவது:
மதுராந்தகம் அருகே கொங்கரையில் மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி மிகுந்த வேதனை யளிக்கிறது.
“இன்னும் எத்தனை கொடுஞ்செய்திகளை தமிழ்நாட்டு மக்கள் கேட்க வேண்டும் என்று இந்த அரசு எதிர்பார்க்கிறது? உயிரச்சத்தில் உறைந்து போய் உள்ள மக்களின் குரல்கூட இந்த சொரணை யற்ற அரசின் காதுகளுக்கு கேட்கவில்லையா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடி யாகக் கைது செய்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும் நீதியும் கிடைப்பதை அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை சொரணையற்ற த.வெ.க. அரசுக்கு மக்களின் குரல் கேட்கவில்லையா? கனிமொழி எம்.பி. கேள்வி
Leave a Comment
