மணிலா, செப். 7- பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில், பிலிப்பைன்ஸ் துணை அதிபர் சாரா டுட்டார்டே நீதிமன்றத்தில் ஆஜராகி பிணை பெற்றுள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய துணை அதிபர் சாரா டுட்டார்டே, அதிபர் பெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராகப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இது தொடர்பாக அவர் மீது கொலை மிரட்டல் விடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு வழக் குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், தனது பேச்சை ஊடகங்களும் அதிகாரிகளும் தவறாகப் புரிந்து கொண்டதாக சாரா விளக்கமளித்திருந்தார்.
கொலை மிரட்டல் குற்றச்சாட்டின் அடிப் படையில் சாராவுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் நீதிமன்றம் சமீபத்தில் கைது ஆணை பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, நேற்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான அவர், பிணை மனுத் தாக்கல் செய்தார்.
நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கி உத்தர விட்டதை அடுத்து, சாராவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த கைது ஆணை ரத்து செய்யப்பட்டது.
ஏற்கெனவே ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பிலிப் பைன்ஸ் செனட் அவையில் பதவிநீக்க விசாரணையை சாரா எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில், இக்கொலை மிரட்டல் வழக்கும் தீவிர மடைந்துள்ளது அவருக்கு மேலும் பெரிய சட்டச் சிக்கலையும் அரசியல் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.
