மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரங்கள் ஓத உத்தரவிட முடியாதாம்! மதுரை உயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி

இணையவழி கையெழுத்து இயக்கம்

மதுரை, செப்.4-  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா வில் சமஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக தமிழ் மந்திரங்களையும் ஓத உத்தரவிடக் கோரிய மனுக்களை மதுரை உயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.

கரூரைச் சேர்ந்த வழக்குரைஞர் தமிழ் ராஜேந்திரன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் தமிழ்நாட்டின் கோயில்களில் குடமுழுக்கு நடைபெறும் போது சமஸ்கிருத மந்திரங்களுடன், தமிழ் மந்திரங்களையும் ஓத வேண்டும் என்ற கோரிக்கையுடன் உயர்நீதிமன்றத்தில் பலர் வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கோயில் குட முழுக்கின்போது பயன்படுத்தபட வேண்டிய தமிழ் மந்திரங்கள் குறித்த விவரங்களைப் பரிந்துரைக்க நிபுணர் குழு அமைக்கவும், அந்தக் குழுவின் அறிக்கையைப் பெற்று யாகசாலை, கருவறை, கோபுர விமானத்தில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் ஆன்மிக மந்திரங்கள் உச்சரிக்கவும், பக்தி பாடல்கள் பாடவும் வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவைப் பின்பற்றி செப்.17-இல் நடைபெறும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கிலும் சமஸ்கிருத மந்தி ரங்களுக்கு இணையாக தமிழ் மந்திரங்களையும் ஓத உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இதே கோரிக்கையுடன் கோவையைச் சேர்ந்த சுரேஷ் பாபு என்பவரும் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை நீதிபதி சி.சரவணன் விசாரித்தார்.

கோயில் தரப்பில், ‘கோயில்களில் முந்தைய குடமுழுக்கு விழாக்களில் சமஸ்கிருத மந்திரங்களும், தமிழ் மந்திரங்களும் ஓதப்பட்டன. அதேபோல் இந்த குடமுழுக்கு விழாவிலும் மந்திரங்கள் ஓதப்படும்’ எனக் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘தமிழ்நாட்டில் ஆகமக் கோயில்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவ்வழக்கு நிலுவையில் உள்ளது. சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் மந்திரங்கள் இடம்பெறுவது குறித்து தமிழ்நாடு அரசு குழு அமைக்க வேண்டும் என 2021 இல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

சட்டம் சரியாக அமல்படுத்தப்படு கிறதா என்பதை உறுதி செய்வதுதான் நீதிமன்றத்தின் பணி. சட்டத்தை நீதிமன்றத்தால் உருவாக்க முடியாது. அரசுதான் சட்டத்தை உருவாக்க முடியும். எனவே, மனுதாரர்கள் கோரும் நிவாரணத்தை வழங்க முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’’ என கூறப்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *