தி.மு.க. முப்பெரும் விழா விருதுகள் பெறவிருப்போருக்கு நமது வாழ்த்துகள்! பாராட்டுகள்!!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

தி.மு.க.வின் முப்பெரும் விழா வருகிற செப்டம்பர்  15 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் இவ்வாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலைத் தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.

தி.மு.க. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர்

பெரியார் விருதுக்குத் தி.மு.க. விவசாய அணி துணைச் செயலாளர் கு. செல்லப்பா,

அண்ணா விருதுக்கு சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே.சுபாஷ்,

கலைஞர் விருதுக்குத் தி.மு.க. – துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.க. மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா,

பாவேந்தர் விருதுக்கு மருத்துவ அணித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி
என்.வி.என். சோமு,

பேராசிரியர் விருதுக்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ். அகமது தம்பி,

மு.க.ஸ்டாலின் விருதுக்கு  தி.மு.க. இளைஞர் அணி துணைச் செயலாளர் நா. இளையராஜா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விருதுகள் பெற உள்ளவர்களுக்கு தாய்க் கழகமான திராவிடர் கழகம் பாராட்டுகளை, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

அதே போல, மூத்த பத்திரிகையாளரும், சீரிய சிந்தனையாளரும், எழுத்தாளருமான  ப. திருமாவேலன் அவர்களுக்கு 2026ஆம் ஆண்டிற்கான ‘முரசொலி செல்வம் விருது’ என்பது பெரிதும் பாராட்டுக்குரிய ஒன்றாகும். அவருக்கும் நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

 

3.9.2026     

சென்னை   

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *