தமிழ்நாட்டில் ட்ரோன் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புத்தொழில்கள் மற்றும் புத்தாக்கத்திற்கான சூழல் அமைப்பை உருவாக்கவும், தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகன கழகத்தின் செயல்பாடுகளைச் சீராக மேற்கொள்ளவும் பின்வரும் ஒப்பந்தகால பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தக் காலத்தில் திருப்திகரமான பணித்திறன் வெளிப்படுத்தப்படும் பட்சத்தில், தேவை மற்றும் தனிநபரின் பணித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.
பணி மற்றும் காலியிடங்கள்:
மொத்த காலியிடங்கள்: 36.
பணி: ட்ரோன் பைலட். காலியிடங்கள்: 7.
பணி: ட்ரோன் கோ பைலட். காலியிடங்கள்: 7.
பணி: ஆ.பி.டி.ஓ., சூப்பர் வைசர். காலியிடங்கள்: 15.
பணி: ஓட்டுநர். காலியிடங்கள்: 1.
தகுதி: பத்தாம் வகுப்பு, டிப்ளமோ, பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வயதுவரம்பு மாறுபடுவதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் tnuavcorp.com இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி செய்து, தெளிவாக நிறைவு செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ சமர்ப்பிக்கலாம்; அல்லது விண்ணப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளை [email protected] / [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
The Managing Director, Tamil Nadu Unmanned Aerial Vehicles Corporation, Employment Exchange Office, 42, Alandur Rd, Thiru Vi Ka Industrial Estate, SIDCO Industrial Estate, Guindy, Chennai – 600 032
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசிநாள்: 18.9.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு: tnuavcorp.com.
