புதுடில்லி, செப். 2- பெட்ரோல் நிலையங்களில் உள்ள எரிபொருள் வழங்கும் இயந்திரங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரசீதுகளில் பெட்ரோலில் எத்தனால் கலவை சதவீதத்தைத் தெளிவாக குறிப்பிட வேண்டும் என்று வழக்குரைஞர் நரேந்திர கோஸ்வாமி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மேலும், எந்தெந்த வாகன மாடல்களுக்கு எத்தனால் 20 சதவீத கலப்பு (E20) பெட்ரோல் ஏற்றது என்ற விவரங்கள் அடங்கிய தரவுத்தளத்தை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பி.பி.வரலே ஆகியோர் அமர்வில் நேற்று (31.8.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது ‘‘இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்க முடியாது. சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தை மனுதாரர் அணுக வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தனர்.
