245 சாலைகளின் உயரம் அதிகம் – வீடுகளோ பள்ளங்களில் – கடும் மழையால் ஏற்படும் விபரீதம்! அறப்போர் இயக்கம் நடத்திய ஆய்வில் தகவல்

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செ.1- ஒப்பந்ததாரர்களின் விதிமீறலால் 245 சாலைகள் உயரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று அறப்போர் இயக்கம் தகவல் தெரிவித் துள்ளது.

அறப்போர் இயக் கத்தின் ஒருங்கிணைப் பாளர் ஜெயராம் வெங்கடேசன் நேற்று  முன்தினம் (30.8.2026) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அறப்போர் இயக்கம் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று பொதுமக்கள் மற்றும் அறப்போர் இயக்க தொண்டர்கள் சாலை உயரம் அதிகரித்த இடங் களை படம் எடுத்து பதிவிட ஒரு ‘கூகுள் பார்ம்’ இணையதள லிங்கை கொடுத்திருந்தோம்.

தமிழ்நாடு முழுவதும் சாலை உயரம் அதிகரிப்ப தால் ஏற்படும் இன்னல்கள் குறித்து அந்தந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கண்டறிந்து அதன் விவரங்களை அறப்போர் இயக்கத்திற்கு கடந்த 6 வார காலமாக அனுப்பி வருகின்றனர்.

அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழ்நாடு முழுவதும் இருந்து 157 ஆர்வலர்கள் அவரவர் பகுதியில் உள்ள சாலை உயரம் அதிகரித்த பகுதிகளை கண்டறிந்து ஒளிப்படம் எடுத்து இந்தச் செயலி இணைப்பில் (லிங்கில்) பதிவு செய்து இருந்தனர். ஒட்டுமொத்தமாக 245 சாலை உயரம் அதிகரிக்கப் பட்டுளது.

புதிய சாலை போடும் போது பழைய சாலையை சுரண்டி எடுக்க வேண்டும் என்ற விதியை ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்து மீறுவதே இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக உள்ளது.

இதனால், ஒவ்வொரு முறையும் புதியதாக தார் சாலை அமைக்கும் பொது சாலையின் உயரம் கூடிக்கொண்டே போய், வீடுகள் சாலை உயரத்தை விடப் பள்ளமாகி விடுகின்றன.

மக்களின் இன்னல், பொருளாதார இழப்பு மற்றும் பருவ மழை காலங்களில் ஏற்படும் வேதனையை அரசு உணர்ந்து உடனடியாக செயல்படுவது மிக அவசியமானது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *