பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ‘போக்சோ போர்டல் 2.0’ செயல்படுத்தப்படும்! – சட்டப் பேரவையில் அறிவிப்பு

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 1- தமிழ்நாடு சட்டப் பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மீதான விவாதங்களுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:

தமிழ்நாட்டில் பாதுகாப்பான மற்றும் சிறப்பான வசதிகளுடன் ரூ.51 கோடி செலவில் 300 புதிய அங்கன்வாடி மய்யங்களுக்கான கட்டடங்கள் கட்டப்படும்.

அஸ்பெஸ்டாஸ் கூரையில் இயங்கி வரும் 1,662 அங்கன்வாடி மய்யங்களின் கூரைகள், வெப்பத் தடுப்பு பியூஎஃப் பேனல்களாக ரூ.66.48 கோடியில் மாற்றியமைக்கப்படும்.

முன்பருவக் கல்வி பயிலும் 3 முதல் 6 வயதுக்குட்பட்ட 1.04 லட்சம் குழந்தைகள் எழுத்துகளையும் எண்களையும் எளிதில் பழகும் வகையில், ரூ.5.20 கோடியில் வீடுகளுக்கே எடுத்துச் சென்று பயன்படுத்தும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்படும்.

தருமபுரி, சேலம், திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் மலைப்பகுதிகளில் செயல்படும் 100 அங்கன்வாடிகள், தொலைக்காட்சி, இணைய வசதி, குடிநீர் சுத்திகரிப்பான் போன்ற நவீன வசதிகளுடன் ரூ.1 கோடி செலவில் மாதிரி குழந்தை மய்யங்களாகத் தரம் உயர்த்தப்படும்.

வளரிளம் பருவ மாணவ, மாணவி களிடையே காணப்படும் ரத்த சோகை யைத் தடுக்கும் விதமாக, திருவள்ளூர், திருப்பூர், நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் முதல்கட்டமாக சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ரூ.38 கோடியில் அமல்படுத்தப்படும்.

குழந்தைகள் மற்றும் இளைஞர் களிடையே போதைப் பொருள் பயன் பாட்டைத் தடுக்கவும், விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்கவும் ரூ.3.80 கோடியில் மாநில அளவிலான செயல்திட்டம் செயல் படுத்தப்படும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை கண்காணித்து, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு, இழப்பீடு மற்றும் ஆலோசனைகள் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் காவல்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் நீதித் துறையை ஒருங்கிணைக்கும் மாநில அளவிலான ‘போக்சோ போர்டல் 2.0’ செயல் படுத்தப்படும்.

முதியோரின் நலனைக் காக்கும் வகையில், பொது மற்றும் தனியார் கூட்டாண்மை முறையில் ரூ.14.50 கோடியில் நவீன ஓய்வுக்கால இல்லம் அமைக்கப்படும். மேலும், மூத்த குடிமக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் ஒரே கூரையின் கீழ் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், 38 மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த சேவை மய்யங்கள் தொடங்கப்படும்.

‘அண்ணனின் சீர்’ திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை முதலமைச்சர் ஜோசப் விஜய்யால் வழங்கப்படும். இத்திட்டத்துக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வரதட்சணை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டம், குழந்தை திருமண தடுப்புச் சட்டம், மூத்த குடிமக்கள் நலச் சட்டம், திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் ஆகியவை கடுமையாக்கப்பட்டுள்ளன.

மாற்றுத் திறனாளிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘நம்பிக்கை இல்லம்’ திட்டத்துக்கு ரூ.4 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவுசார் பயிற்சி, ஆரம்பகால பயிற்சி மற்றும் தொழிற்பயிற்சி கள் விரிவாக வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 21 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *