அடையாளம் காண முடியாத உடல்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு நேபாளப் பிரதமர் தகவல்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

காத்மாண்டு, ஆக. 31– நேபாளத்தில் மீட்கப்பட்ட அடையாளம் காண முடியாத உடல்களை அடக்கம் செய்வதற்கு முன்பு டிஎன்ஏ மாதிரி சேகரிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன சுமார் 3,000 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பிரதமர் பாலேந்திர ஷா மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: மீட்புப் பணியின்போது ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இதில் குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்ட உடல்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

அதேநேரம் பல உடல்கள் அடையாளம் காண முடியாத வகையில் சிதைந்துள்ளன. அந்த உடல்களை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க முடியாது. எனவே, சட்டப்பூர்வ நடைமுறைகளுக்குப் பிறகு அவை அடக்கம் செய்யப்படவுள்ளன.

உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்வதற்கு முன்பு அரசு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும். குறிப்பாக, அடையாளம் தெரியாத உடல்களின் டிஎன்ஏ மாதிரிகள் மற்றும் பிற தகவல்கள் அடக்கம் செய்வதற்கு முன்பு சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும். இது காணாமல் போனவர்களின் உறவினர்கள், தங்கள் அன்புக்குரியவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *