நான்சி கிரேஸ் ரோமன் பெயரில் ஆற்றல் வாய்ந்த புதிய விண்வெளித் தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்டது

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

வாசிங்டன், ஆக. 31- அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’, சுமார் 3,800 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட ‘நான்சி கிரேஸ் ரோமன்’ விண்வெளி தொலை நோக்கியை விண்ணில் செலுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘பால்கன் ஹெவி ராக்கெட் மூலம் இந்த தொலைநோக்கி நேற்று ஏவப்பட்டது.

இந்த தொலைநோக்கி பூமியில் இருந்து 16 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள அதன் ஆய்வு நிலையை சென்றடைய மூன்று மாதங்களுக்கும் மேல் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கோள்களை கண்டறிதல், பிரபஞ்சத்தின் மறைந்திருக்கும் இருள் ஆற்றல் குறித்த ஆய்வு உட்பட பல ஆராய்ச்சிப் பணிகளுக்காக இந்த தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

மேலும், பிரபஞ்சத்தின் மொத்த உள்ளடக்கத்தில் 90 சதவீதத்திற்கு மேல் இருக்கும் இருள் பொருள்(Dark Matter) மற்றும் இருள் ஆற்றல்(Dark Energy) ஆகியவை குறித்தும் ரோமன் தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. இருள் சக்தி என்பது பிரபஞ் சத்தின் விரிவாக்கம் வேக மடைவதற்கு காரணமாக கருதப்படுகிறது.

நாசாவின் முதல் தலைமை வானியலாளரான மறைந்த நான்சி கிரேஸ் ரோமனை சிறப்பிக்கும் வகையில் அவரது பெயர் இந்த தொலைநோக்கிக்கு சூட்டப்பட்டுள்ளது. நான்சி கிரேஸ் ரோமன் தொலை நோக்கியின் ஆய்வுபரப்பு, 36 ஆண்டுகளாக விண் வெளியில் செயல்பட்டு வரும் நாசாவின் ‘ஹபிள்’ தொலைநோக்கியைவிட 100 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *