தேசிய செவிலியர் ஆணையத்தை இரண்டு மாதத்தில் அமைக்க ஒன்றிய அரசுக்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, ஆக. 28- இந்திய தொழில்முறை செவிலியர் சங்கம் சார்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: 2023-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘தேசிய செவிலியர் மற்றும் மகப்பேறு மருத்துவப் பணி ஆணையச் சட்டம்’ ஒன்றிய அரசால் 2024 பிப்ரவரி 29 அன்று நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

இதன்படி, இந்தியாவில் செவிலியர் மற்றும் மகப்பேறு மருத்துவக் கல்வி, பயிற்சி நடைமுறைகளை ஒழுங்குபடுத்த ‘இந்திய செவிலியர் கவுன்சிலுக்கு’ பதிலாக ‘தேசிய செவிலியர் மற்றும் மகப்பேறு மருத்துவப் பணி ஆணையம்’ அமைக்கப்பட வேண்டும். ஆனால், ஆணையம் இன்னும் அமைக்கப் படவில்லை. எனவே, உடனடியாக ஆணையம் அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா பிறப்பித்த உத்தரவில், “இந்த மனுவையே மனுதாரரின் கோரிக்கை மனுவாகக் கருதி, 2 மாதங்களுக்குள் தேசிய செவிலியர் மற்றும் மகப்பேறு மருத்துவப் பணி ஆணையம் அமைப்பது குறித்து ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தகுந்த முடிவை எடுக்க வேண்டும். ஒருவேளை மனுதாரர் கோரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனில், டில்லி உயர் நீதிமன்றத்தை அவர் மீண்டும் அணுகலாம்” என கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *