கனடாவில் யாகம் நடத்துவதாகக்கூறி இளம் பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை பிரபல ஹிந்து மடத்தலைவர் கைது

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஓடாவா, ஆக 27 கனடாவின் ஒஷாவா பகுதியில் குடியிருக்கும் ஹிந்து குடும்பம் ஒன்று கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில், அமெரிக்கா மற்றும் கனடாவில் பிரபலமாக விளங்கும் சாமியார் ராஜேந்திரநாத் தூத்நாத் மகாராஜ் என்பவரை கனடா காவல் துறை கைது செய்துள்ளது.

அமெரிக்காவில் தொழில் செய்துவரும் தொழிலதிபர் குடும்பத்தினர், தங்கள் வீட்டுத் திருமண ஆலோசனைகளுக்காகவும் சிறப்பு வழிபாட்டிற்காகவும் நியூயார்க்கின் ரிச்மண்ட் பகுதியில் பெரிய மடம் நடத்தி வரும் ராஜேந் திரநாத்தூத்நாத் மகாராஜை கனடாவிற்கு அழைத் துள்ளனர்.

பூஜையின் போது மணப்பெண் ணிற்கு “தீய ஆவிகள் பிடித்திருக்கின் றன, அதை குணப்படுத்த சிறப்புச் சடங்கு செய்ய வேண்டும்” என்று ஏமாற்றிய சாமியார், அப்பெண் ணைத் தனி இடத் திற்கு அழைத்துச் சென்று மதச் சடங்கு என்ற போர்வையில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அவரைக் கைதுசெய்த கனடா நாட்டு காவல் துறையின் விசாரணை யின்போது, “மத வழக்கப்படி தீட்டு கழிப் பதற்காகவே இவ்வாறு செய்யப் பட்டது, இது சாஸ்திர விதிகளில் உள்ளது” என்று சாமியார் கூறியதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக சாமியாரின் வழக்குரைஞர் பேசும் போது “இவர் அமெரிக்கா மற்றும் கனடா வாழ் ஹிந்து மக்களிடையே மிகுந்த மதிப்பு மிக்கவர்; அவரைக் கைது செய்தால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வேதனையடைவார்கள்” என அவரது வழக்குரைஞர் வாதாடியுள்ளார்.

சோதனையின் போது, சாமியாரின் வாகனத்தில் இருந்து ஏராளமான ஆபாசக் காணொலிகளைக் கனடா காவல் துறை யினர் கைப்பற்றி யுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து விரிவாக விசாரிக்க அதி காரியான ‘குரோனை’ என்பவரது தலைமையில் கனடா காவல் துறை தனிப்படை ஒன்றை அமைத்துள்ளது. பாதிக்கப்பட்ட வேறு யாரேனும் இருந்தால் தொடர்பு கொள்ள சிறப்புத் தொலை பேசி எண்ணையும் அறிவித்துள்ளது.

மேலும், www.durhamregionalcrimestoppers.ca என்ற இணையதளம் மூலமாக இந்தச் சாமி யார் தொடர் பான கூடுதல் தகவல்களைத் தருப வர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப் படும் என்றும் கனடா காவல்துறை பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *