மெட்டா நிறுவனத்துக்கு ரூ.162 கோடி அபராதம்! அமெரிக்க நீதிமன்றம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

கலிபோர்னியா, ஆக.27– குழந்தைகளை சமூக வலைதளங்களுக்கு அடிமையாக்கும் வகையில் செயலிகளை வடிவமைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், ‘மெட்டா’ நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.162 கோடி அபராதத்தை செலுத்த அந்நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

‘பேஸ்புக்’, ‘இன்ஸ்டாகிராம்’ ஆகிய சமூக வலைதளங்களை நடத்தி வரும் மெட்டா நிறுவனத் துக்கு எதிராக அமெரிக்காவின் 47 மாகாண அரசுகள் இணைந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

அதில், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் குழந்தைகளை அதிக நேரம் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சிறுவர், சிறுமிகளின் மனநலம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.குறிப்பாக, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எளிதில் இந்த செயலிகளுக்குள் நுழையும் வகையில் மெட்டா நிறுவனம் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் நேரில் ஆஜராக வேண்டிய சூழலும் ஏற்பட்டது. வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளியாவதற்கு முன்பாகவே, ரூ.162 கோடி அபராதத்தை செலுத்த மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *