மம்தா கார்மீது கல்வீச்சு! பிஜேபி ஆட்சியில் வன்முறை

2 Min Read

கொல்கத்தா, ஆக.10- மேற்கு வங்க மேனாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கார் மீது செங்கல், செருப்பு வீசி பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. கார் கண்ணாடி திறந்திருந்தால் மண்டை உடைந்து இறந்தே போயிருப்பேன் என மம்தா குற்றம்சாட்டி உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் காவல் நிலைய காவலில் உயிரிழந்ததாக கூறப்படும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டரின் குடும்பத்தினரை சந்திக்க அம்மாநில மேனாள் முதலமைச்சர் மம்தா வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள ஹலிசஹருக்கு நேற்று (9.8.2026) சென்றார்.

அப்போது, மம்தாவின் காரை சூழ்ந்து கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது. சிலர் ‘திருடி‘, ‘திருடர்களின் ராணி’ என  எதிர்ப்பு முழக்கமிட்டனர். அங்கிருந்து திரும்பிய மம்தா  செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘என் கார் மீது கற்கள், செருப்புகள் மற்றும் சேறு வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது ஒரு சதி. நான் வருவதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருந்தேன்.

ஆனால் அதையும் மீறி எந்த பாதுகாப்பு நடவடிக்கைளும் எடுக்கப்பட வில்லை. என் கார் மீது பெரிய செங்கல் வீசப்பட்டது. நல்லவேளை கார் ஜன்னல் கண்ணாடி மூடியிருந்ததால் தப்பி னேன். இல்லாவிட்டால் என் மண்டை உடைந் திருக்கும். அங்கேயே இறந்திருக்கலாம். என்னை குறிவைக்க பாஜ தலைமையிலான மாநில அரசு குண்டர்களை பயன்படுத்துகிறது. காவல்துறை சமூக விரோதிகளை பாதுகாக் கிறது. மேற்கு வங்கம் சமூக விரோதிகளின் கைகளில் சிக்கி உள்ளது. இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்’’ என்றார்.

சமீபத்தில் நடந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் தோற்ற பிறகு மம்தா செல்லும் பொது இடங்களில் கும்பல் கூடி அவரை அவதூறாக பேசும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இது குறித்து பாஜ மாநில தலைவர் சமிக் பட்டாச்சார்யா கூறுகையில், ‘‘இதற்கும் எங்கள் கட்சிக்கும் தொடர் பில்லை. உள்ளூர் மக்கள் மம்தாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், பதற்றத்தை தூண்டுவதற்காக அவர் காஞ்ச்ராபராவுக்கு வந்துள் ளார். இது மக்களின் கோபம்’’ என்றார். இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *