பெரியார் மருந்தியல் கல்லூரியில் கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருச்சி, ஆக.26- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் ARTLETICA – கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் (13.08.2026 – 14.08.2026 & 19.08.2026 – 21.08.2026) அய்ந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.

இதன் துவக்கவிழா 13.08.2026 அன்று காலை 9.30 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையில் கலைப்போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.கற்பகம் குமர சுந்தரி வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்றத்தின் மேனாள் வழக்குரைஞரும் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தின் வழக் குரைஞருமான ஹனிஃபா பீ கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.

அவர் தமது உரையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களின் பெயரில் அமைந்த மருந்தியல் கல்லூரியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமதிப்பும் மகிழ்ச்சியும் அடைவதாகவும் இத்தகைய வாய்ப்பை வழங்கிய நிர்வா கத்திற்கும் கல்லூரியின் முதல் வருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் சாதிக்க நினைக்கும் மாணவர்களுக்கு ஊக்கமும், ஊக்கம் மட்டும் இருந்தால் போதாது. வறுமையினால் ஏற்படுகின்ற ஏக்கமும் இருக்க வேண்டும். இன்றைய இளைய சமுதாயம் போதை பொருட்களை பயன்படுத்துவதால் உடலளவிலும், மனதளவிலும் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்து வருகின்றனர்.

படிக்கக்கூடிய காலங்களில் மாணவர்கள் கல்வியோடு கலை, விளையாட்டு என அனைத்திலும் பங்கு கொள்வதால் உடல் ஆரோக்கியத்துடன் மன இறுக்கத்திலிருந்தும் விடுபட முடிகிறது என்றும் உரை யாற்றினார்.

மேலும் 18 வயது நிரம்பி யவர்களுக்கான உரிமை களையும், கடமைகளையும் எடுத்துரைத்ததோடு அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்து கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து சிறப்பித்தார்.

பெரியார் கல்வி நிறுவனங்கள்

கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளின் மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார்.

துவக்கவிழா நிகழ்ச்சியின் நிறைவாக விளையாட்டு போட்டிகளின் ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் சூ.சக்திவேல் நன்றியுரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து “இன்றைய இளைஞர்களும் மனிதநேயமும்”, “சமூகநீதி பயணத்தில் தந்தை பெரியார் முதல் தமிழர் தலைவர் வரை”, “நலவாழ்வுத் துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கமும் வாய்ப்புகளும்”, “மனநல விழிப்புணர்வு நம் அனைவரின் பொறுப்பு”, “நவீன கால நெருக்கடிகளும் பிரதிபலிப்புகளும்”, “மகளிர் முன்னேற்றமே உலகியல் வளர்ச்சி”, “புத்தகம்”, “சுற்றுச்சூழல் பாதுகாப்பு”, “உணவே மருந்து”, “ஜென்-சி – நவீனமும் சிரமங்களும்”, “பெரியார் உலகம்”, “போதையில்லா சமூகம்”, போன்ற பல்வேறு தலைப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியம், மொழியில்லா நாடகம், பாடல், நடனம் மற்றும் நாட்டியம் போன்ற பல்வேறு போட்டிகள் மாணவர்களின் பல்வேறு திறன்களை வளர்க்கும் விதமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து 19.08.2026 முதல் 21.08.2026  வரை மாணவர்களுக்கு கபடி, கால்பந்து, கைப்பந்து, எறிபந்து, வட்டெறிதல், குண்டெறிதல், ஈட்டியெறிதல், ஓட்டம், தொடர் ஓட்டம், சதுரங்கம், கேரம் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்தநாள் விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *