திருச்சி, ஆக. 22- திருச்சியில் சுதந்திர நாள் விழாவை முன் னிட்டும், இளம் தலை முறையினரிடையே போதை ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையிலும் நடைபெற்ற ஆறாவது மாநில அளவிலான சிலம்பப் போட்டியில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் வி. நிகில் இரண்டாம் இடம் பிடித்து மாபெரும் சாதனை படைத்துள்ளார்.
ஏ.குமரேசன் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 16, 2026 அன்று இந்த மாநில அளவிலான சிலம்பப் போட்டி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திறமையான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட இப்போட்டியில், பதினொரு வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில், திருச்சி பெரியார் பள்ளி மாணவர் வி. நிகில் ‘தனிச்சுருள்’ பிரிவில் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தினார். கடுமையான போட்டிகளை எதிர்கொண்டு அவர் மாநில அளவில் இரண்டாம் பரிசை வென்று வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
நம் தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை வடிவமான சிலம்பத்தில் இளம் வயதிலேயே மாநில அளவில் முத்திரை பதித்து, பள்ளிக்கும், திருச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள மாணவர் வி.நிகிலுக்குச் சிறப்பான பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
வெற்றி பெற்ற மாண வருக்குச் சிலம்பப் பயிற்சி அளித்த ஆசிரியை பத்மா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கோகுல், சவும்யா ஆகியோருக்கும், பள்ளித் தாளாளர், முதல்வர், சக ஆசிரிய பெருமக்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களது மனமார்ந்த வாழ்த்துக ளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர்.
