பா.ஜ.க.வை அஸ்தமனமாக்கும் வரை ஓயமாட்டேன்!’ மம்தா பரபரப்பு பேச்சு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, ஆக.25 மேற்கு வங்க மாநிலத்தின் மேனாள் முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலை வருமான மம்தா நேரலையில் மக்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கை யானது, தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை செயல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் மற்றொரு மறைமுக முயற்சியாகும். இதற்காக எந்தவொரு அரசியல் கட்சிகளுடனும் எந்தவித முன் ஆலோசனையும் செய்யாமலேயே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்று குற்றம்சாட்டினார்.

மேலும் தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய அவர், “நான் எந்தக் காலத்திலும் அரசியல்ஓய்வு  மேற்கொள்ளப் போவதில்லை. பாஜகவை முழுமையாக அரசியல் அஸ்தமனத்திற்கு தள்ளும் வரை என் போராட்டம் ஓயாது” என்று உறுதியளித்துப் பேசினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *