புதுடில்லி, ஆக.25 மேற்கு வங்க மாநிலத்தின் மேனாள் முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலை வருமான மம்தா நேரலையில் மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கை யானது, தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை செயல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் மற்றொரு மறைமுக முயற்சியாகும். இதற்காக எந்தவொரு அரசியல் கட்சிகளுடனும் எந்தவித முன் ஆலோசனையும் செய்யாமலேயே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்று குற்றம்சாட்டினார்.
மேலும் தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய அவர், “நான் எந்தக் காலத்திலும் அரசியல்ஓய்வு மேற்கொள்ளப் போவதில்லை. பாஜகவை முழுமையாக அரசியல் அஸ்தமனத்திற்கு தள்ளும் வரை என் போராட்டம் ஓயாது” என்று உறுதியளித்துப் பேசினார்.
