டெக்கான் கிரானிக்கல், சென்னை :
* மனுஸ்மிருதி மீது ராகுல் தாக்கு: ராகுல் காந்தி, பெண்களின் சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தி, மனுஸ்மிருதியை கடுமையாக விமர்சித்தார். பெண்கள் யாருக்கும் கீழ்ப்படிந்தவர்கள் அல்ல; கல்வி, வேலை, சொத்துரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளிலும் சம வாய்ப்பு பெற வேண்டும் என புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேச்சு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் – அமெரிக்க சுற்றுப்பயணத்திற்கு அனுமதி மறுப்பு. ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அயோத்தி ராமன் கோயில் நன்கொடை திருட்டு: கோயில் அறக்கட்டளை முதன்மை நிர்வாகிகள் சம்பத் ராய், அனில் மிஸ்ரா மீது முதல் தகவல் அறிக்கை (எம்அய்ஆர்) பதிவு செய்ய வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை
தி இந்து:
* ‘தொழில்’ என்பதற்கான வரையறை குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து: “தனியார் துறையின் சேவை வழங்கல் அதிகரித்து வரும் திறந்தவெளிப் பொருளாதாரச் சூழலில், ‘தொழில்’ என்பதற்கான பரந்த வரையறையில் இருந்து சட்டத்தை விலக்கி வைப்பதோ அல்லது அதன் வரம்பை குறைப்பதோ, தொழிலாளர் பாதுகாப்புகள் மிகவும் தேவைப்படும் தருணத்திலேயே அவற்றை பலவீனப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகிறது,” என்று காங்கிரஸ் தலைவர் கூறினார்.
* தலைமைச் செயலாளரை நீக்க சி.பி.எம். கோரிக்கை; இடதுசாரி கட்சிகள் ஏற்பாடு செய்யும் போராட்டங்களில் பங்கேற்கும் “உந்துதலுக்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆளாவதைத் தடுக்க” அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி தலைமைச் செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கை விவகாரத்தில் முதலமைச்சரின் ‘மவுனம்’ குறித்து சி.பி.அய். கேள்வி
* என்டோஸ்கோபிக் படக்கருவி மூலம் வினாத்தாள் திருட்டு: சத்தீஸ்கரில் வினாத்தாளை கசியவிட பேராசிரியர் எண்டோஸ்கோபிக் படக்கருவியைப் பயன்படுத்தியதாகக் காவல்துறை தகவல்: பேராசிரியர், 5 மாணவர்கள் கைது:
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘முதலில் ஜாதி முறையை ஒழிக்க நடவடிக்கை எடுங்கள்’: இடஒதுக்கீடு ஒரு அரசியலமைப்பு உரிமை: டில்லி ஜந்தர் மந்தரில் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம் நடைபெறுவது குறித்து ஒன்றிய சமூக நீதித்துறை இணை அமைச்சர் அதாவலே கருத்து.
– குடந்தை கருணா
