சமூக நீதிக்கு எதிரான சதித்திட்டம் இதர பிற்படுத்தப்பட்டோர் அட்டவணை புறக்கணிப்பு! ஒன்றிய அரசு மீது காங்கிரஸ் கடும் தாக்குதல்

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக.21 இந்தியாவில் நடை பெறவுள்ள பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தின் வினாத்தாளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனிப்பிரிவு அல்லது அட்டவணை ஒதுக்கப்படாததற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளி யிட்டுள்ளது.

சமூக நீதிக்கு எதிரான
நடவடிக்கை 

ஒன்றியத்தில் உள்ள பாஜக அரசு, பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான மக்கள் தொகை எண்ணிக்கையை அதி காரப்பூர்வ புள்ளிவிவரங்களில் சேராமல் மறைப்பதற்காகவே திட்டமிட்டு ஓபிசி பிரிவை கணக்கெடுப்பு வினாத்தாளில் இருந்து நீக்கியுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.  சமூக நீதிக்கு எதிரான நட வடிக்கை  மக்கள்தொகை கணக்கெடுப்பு படிவத்தில் பட்டியல் ஜாதிகள்  மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு தனியாகப் பிரிவுகள் வழங்கப்பட்டிருப்பது போல, ஓபிசி பிரிவினருக்குத் தனியாக அட்டவணை ஒதுக்கப்படாதது சமூக நீதிக்கு எதிரானது.

உண்மையான தகவல்கள் சிதையும் அபாயம்!

இந்த அமைப்பால் பிற்படுத்தப்பட்ட மக்களின் சரியான எண்ணிக்கையைத் துல்லியமாகக் கண்டறிய முடியாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  பொதுவான பிரிவில் அடைப்பதால் ஏற்படும் குழப்பம் ஜாதியை நேரடியாகக் குறிப்பிடும் தனிப்பிரிவு இல்லாமல் ‘மற்றவர்கள்’ என்ற பொதுவான பகுதியின் கீழ் ஜாதிப் பெயர்களைப் பதிவு செய்யும் வகையில் படிவம் அமைக்கப்பட்டி ருப்பதால் தரவுகளில் பெரும் குழப்பம் ஏற்படும். ஒரே சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வெவ்வேறு வட்டாரப் பெயர்கள் மற்றும் உச்சரிப்புகளில் பதிலளிக்கும் போது, மில்லியன் கணக்கான மாறுபட்ட பெயர்கள் பதிவாகி உண்மையான தகவல்கள் சிதையும் அபாயம் உள்ளது.  அறிவியல் பூர்வமான ஜாதிவாரி கணக்கெடுப்பு  தெலங்கானா மாநிலத்தில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பில் 54 கேள்விகள் கொண்ட படிவம் மற்றும் 242 ஜாதிகள் அடங்கிய தெளிவான பட்டியல் பயன்படுத்தப்பட்டதை காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோன்ற வெளிப்படையான, அறிவியல் பூர்வமான முறையைப் பின்பற்றி ஒன்றிய அரசும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் OBC வகுப்பினருக்குத் தனிப்பிரிவைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமருக்குக் கடிதம்

பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளையும் அவர்களின் மக்கள்தொகை பிரதிநிதித்து வத்தையும் உறுதிசெய்யும் வகையில், நடை பெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவைத் தனிப்பகுதியாக இணைக்கக் கோரி கங்கிரஸ் கட்சி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *